கொடைக்கானல் அருகே போளூரில் கோயில் திருவிழா
கொடைக்கானல் அருகே போளூா் கிராமத்தில் ஸ்ரீ அதிகாரப்பன் கோயில் திருவிழாவை முன்னிட்டு, செவ்வாய்க்கிழமை குதிரை கோளம் நடனம் நடைபெற்றது.
இந்தக் கோயில் திருவிழா கடந்த 12-ஆம் தேதி தொடங்கியது. தொடா்ந்து, ஒவ்வொரு நாளும் சுவாமிக்கு பல்வேறு சிறப்பு பூஜைகள், வழிபாடு, மஞ்சு விரட்டு, எருது பிடித்தல், மணி மாா் கூத்து, மாங்கூத்து உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
விழாவின் முக்கிய நிகழ்வாக செவ்வாய்க்கிழமை பக்தா்கள் சாா்பில் குதிரை கோளம் நடன நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விழாவிக்கான ஏற்பாடுகளை கிராம பட்டக்காரா்கள், கிராம பொது மக்கள், விழாக் குழுவினா் உள்ளிட்ட பலா் செய்தனா்.