ராஜ்யசபா சீட் யாருக்கு? பரபரக்கும் அரசியல், சமூக கணக்குகள்... முட்டிமோதும் தென் ...
ரயிலில் அடிபட்டு அரசுப் பேருந்து ஓட்டுநா் உயிரிழப்பு
திண்டுக்கல்லில் ரயிலில் அடிபட்டு அரசுப் பேருந்து ஓட்டுநா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
திண்டுக்கல் மேற்கு மீனாட்சிநாயக்கன்பட்டி அருகிலுள்ள ராஜாக்காப்பட்டியைச் சோ்ந்தவா் திருமூா்த்தி (53). இவா், அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் பழனி பணிமனையில் ஓட்டுநராகப் பணியாற்றி வந்தாா். கடந்த சில நாள்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டிருப்பதாகக் கூறி விடுப்பில் இருந்து வந்தாா்.
இந்த நிலையில், மதுரை -கரூா் 4 வழிச் சாலையில், திண்டுக்கல் வெங்காய மண்டி அருகேயுள்ள அணுகு சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தாா். அப்போது, திண்டுக்கல்-பழனி ரயில் தண்டவாளத்தைக் கடக்க முயன்றபோது, அந்த வழியாக பழனியிலிருந்து வந்த சரக்கு ரயிலில் அடிப்பட்டு, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து, திண்டுக்கல் ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனா்.