செய்திகள் :

கோத்தகிரி: அரசு மருத்துவமனையில் செல்போன் டார்ச் வெளிச்சத்தில் சிறுமிக்கு சிகிச்சை; மக்கள் அதிர்ச்சி!

post image

நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அருகில் உள்ள இடுகொரை பகுதியைச் சேர்ந்த 3 வயது சிறுமிக்கு நேற்றிரவு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டிருக்கிறது. பதறிய பெற்றோர் ஆம்புலன்ஸ் மூலம் கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு சிறுமியை அழைத்துச் சென்றுள்ளனர். மின்வெட்டு காரணமாக மருத்துவமனை இருளில் மூழ்கியும் ஜெனரேட்டரை இயக்காமல் டார்ச் லைட் மற்றும் செல்போன் வெளிச்சத்தில் சிகிச்சை அளிக்கப்பட்ட வீடியோ வெளியாகி, அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

சிகிச்சை

இது குறித்து தெரிவித்த கோத்தகிரி பகுதி மக்கள், "பழங்குடிகள், தோட்ட தொழிலாளர்கள் என சாமானிய மக்களுக்கான ஒரே மருத்துவமனையாக கோத்தகிரி அரசு மருத்துவமனை இருக்கிறது. பல லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அண்மையில் நவீனப்படுத்தப்பட்ட இந்த மருத்துவமனையில் அலட்சியப்போக்கு தொடர்கிறது.

நோயாளிகளின் படுக்கையில் நாய் ஒன்று படுத்திருக்கும் புகைப்படங்கள் அண்மையில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தற்போது சிறுமிக்கு செல்போன் வெளிச்சத்தில் சிகிச்சை அளித்திருக்கிறார்கள். சுகாதாரத்துறை அதிகாரிகள் தொடர் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றனர்.

கோத்தகிரி அரசு மருத்துவமனை

இந்த குற்றச்சாட்டு குறித்து தெரிவித்த மருத்துவமனை தரப்பு, "மின் துண்டிப்பு ஏற்பட்ட காரணத்தால் உடனடியாக டார்ச் லைட் வெளிச்சத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டது. சிறிது நேரத்தில் ஜெனரேட்டர் பயன்படுத்தப்பட்டது. இடைப்பட்ட நேரத்தில் வீடியோ எடுத்து பரப்பியுள்ளனர்" என்றனர்.

குருமலை: தொட்டில் கட்டி தூக்கிவரப்பட்ட கர்ப்பிணி; மலைவாழ் மக்களின் வேதனை தீர்வது எப்போது?

திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டையையொட்டிய ஆனைமலை புலிகள் காப்பகப் பகுதியில் குருமலை, குழிப்பட்டி, மாவடப்பு, பூச்சிக்கொட்டாம்பாறை உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் குடியிருப்புகள் உள்ளன. இங... மேலும் பார்க்க

சல்லி சல்லியாய் நொறுங்கும் ஆம் ஆத்மி?! - சபதத்தை நிறைவேற்றுவாரா அரவிந்த் கெஜ்ரிவால்?

டெல்லி ஆத் ஆத்மி அரசின் அமைச்சரவையிலிருந்தும் கட்சியிலிருந்தும் தன்னை விடுவித்துக்கொண்ட போக்குவரத்து துறை அமைச்சர் கைலாஷ் கெலாட், கட்சியிலிருந்து விலகிய கையோடு பா.ஜ.க-வில் இணைந்திருக்கிறார். ஒரே ஆண்டி... மேலும் பார்க்க

`ஒடுக்குமுறைக்கு எதிரான குரல் அது...' - பெண்கள் உரிமைக்காக போராடும் ஆப்கன் சிறுமிக்கு அமைதிப் பரிசு!

ஆப்கானிஸ்தானின் காபூலில் பெண் குழந்தைகளின் உரிமைகளுக்காக குரல் கொடுத்து வாதிட்ட 17 வயது சிறுமி நிலா இப்ராஹிமிக்கு, அவரின் சிறப்புப் பணியை பாராட்டி மதிப்புமிக்க சர்வதேச குழந்தைகள் அமைதி பரிசு செவ்வாய் ... மேலும் பார்க்க

Rain Alert: `நவம்பர் 25, 26 தேதிகளில் கனமழை' - விடுமுறை தொடர்பாக அறிவிப்பு வெளியிட்ட அன்பில் மகேஸ்!

வடகிழக்குப் பருவமழை ஆரம்பித்து தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் லேசான மழை, அடை மழை, கன மழை என பெய்து வருகிறது.கடந்த ஆண்டைவிடவும் இந்த ஆண்டு மழைப்பொழிவு அதிகமாக இருக்கும் என் வானிலை ஆய்வு மையம் முன்... மேலும் பார்க்க

இயல்பு நிலைக்குத் திரும்பிய திருச்செந்தூர் கோயில் யானை; முகாமிற்கு அனுப்ப திட்டமா.. என்ன நடக்கிறது?

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் யானை தெய்வானை கடந்த 18-ம் தேதி உதவி பாகர் உதயகுமார் மற்றும் அவரது உறவினர் சிசபாலன் ஆகியோரை துதிக்கையால் தாக்கி, காலாலும் உதைத்தது. யானை குடிலில... மேலும் பார்க்க

1000 நாள்களை எட்டிய போர்... உக்ரேனுக்கு எதிராக அணு ஆயுதத்தை கையிலெடுக்கப்போகிறதா ரஷ்யா?!

ஓயாத போர் மேகம்!1000 நாள்கள்...ஆயிரம் நாட்களைக் கடந்தும் உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்ரோஷப் போர் இன்னும் நின்றபாடில்லை. போர் நிறுத்தும் ஏற்படுமா என உலக நாடுகள் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் நிலையில், உக... மேலும் பார்க்க