Shreyas Iyer: `இன்னும் எதுவும் முடியல...' - ஸ்ரேயஸ் ஐயர் நம்பிக்கை
சண்டிகரில் கரோனாவுக்கு ஒருவர் பலி!
சண்டிகரில் கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட ஒருவர் பலியாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உத்தரப் பிரதேசத்தின் ஃபிரோஸாபாத் பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய நபர் ஒருவர் கரோனா பாதிப்பினால், பஞ்சாப்பின் லூதியானாவிலுள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், அவர் இன்று (மே 28) சிகிச்சைப் பலனின்றி பலியாகியதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இருப்பினும், அவருக்கு, தற்போது பரவி வரும் புதிய ரக கரோனா வைரஸான ஜே.என்.1-ன் பாதிப்பு ஏற்பட்டிருந்ததா என்பது இதுவரை உறுதி செய்யப்படவில்லை.
இதுவே, சண்டிகரில் பதிவான முதல் பாதிப்பென்று கூறப்படும் நிலையில் அங்குள்ள அரசு மருத்துவமனையில் தற்போது கரோனா நோயாளிகளின் சிகிச்சைக்காக படுக்கைகளுடன் கூடிய தனிப் பிரிவு ஒதுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த 2 நாள்களுக்கு முன்பு பஞ்சாப் மாநிலத்தில் முதல்முறையாக கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. ஹரியாணாவைச் சேர்ந்த 51 வயதுடைய பெண் ஒருவர் கரோனா பாதிப்பினால் மொஹாலியிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
மேலும், ஹரியாணாவின் சுகாதாரத் துறை அமைச்சர் ஆர்த்தி சிங் ராவ், அம்மாநிலத்தில் 4 கரோனா பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளதாகக் கடந்த வாரம் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க:பயிர்களுக்கு குறைந்தபட்ச கொள்முதல் விலை: மத்திய அமைச்சரவை ஒப்புதல்