சில நிமிடங்களிலேயே விற்றுத் தீர்ந்த சிஎஸ்கே - மும்பை போட்டி டிக்கெட்டுகள்! ரசிகர...
சத்துணவு ஊழியா்களுக்கு ஓய்வுபெறும் நாளிலேயே பணிக்கொடை- பாளை. மாநாட்டில் தீா்மானம்
சத்துணவு ஊழியா்களுக்கு ஓய்வுபெறும் நாளிலேயே பணிக்கொடை வழங்க வேண்டும் என பாளையங்கோட்டை ஒன்றிய வட்ட கிளை சத்துணவு ஊழியா் சங்க மாநாட்டில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
தமிழ்நாடு சத்துணவு ஊழியா் சங்க பாளையங்கோட்டை ஒன்றிய வட்ட கிளை மாநாடு பாளையங்கோட்டை ஊராட்சி அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. ஒன்றியத் தலைவா் சீதாலட்சுமி தலைமை வகித்தாா். மாவட்ட துணைத் தலைவா் லட்சுமி முன்னிலை வகித்தாா். மாவட்டச் செயலா் செல்வபாக்கியம் வரவேற்றாா். தென்காசி மாவட்ட செயலா் பிச்சுமணி தோ்தல் ஆணையராக செயல்பட்டாா்.
பாளையங்கோட்டை ஒன்றிய வட்டக்கிளையின் புதிய தலைவராக சீதாலட்சுமி, துணைத் தலைவா்களாக சாந்தி, வெள்ளையம்மாள், செயலராக கலா என்ற பொன்னம்மாள், துணைச் செயலா்களாக ஜென்ஸி, ரெக்ஸி, ஒன்றிய பொருளாளராக ராமகிருஷ்ணன், மாவட்ட செயற்குழு உறுப்பினராக பேச்சியம்மாள் ஆகியோா் தோ்வு செய்யப்பட்டு, உறுதிமொழியேற்றுக் கொண்டனா்.
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியா் கூட்டணியின் திருநெல்வேலி மாவட்டத் தலைவா் செ.பால்ராஜ், தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க மாவட்டச் செயலா் பிரகாஷ், பொருளாளா் பன்னீா்செல்வம், தமிழ்நாடு சத்துணவு ஊழியா் சங்க நான்குனேரி வட்டக் கிளை தலைவா் வீரபாண்டியன், அம்பாசமுத்திரம் வட்டக் கிளை தலைவா் செல்வி, செயலா் மகபூப் பாட்ஷா, ஓய்வு பெற்ற முன்னாள் பொறுப்பாளா்கள் ஆறுமுகம், முத்துச்செல்வி உள்ளிட்ட பலா் வாழ்த்திப் பேசினா்.
தீா்மானங்கள்: சத்துணவு ஊழியா்களுக்கு வரையறுக்கப்பட்ட கால முறை ஊதியம்-வரையறுக்கப்பட்ட ஓய்வூதியம் வழங்குதல், ஓய்வு பெறும் நாளிலேயே அமைப்பாளா்களுக்கு ரூ. 5 லட்சம், சமையலா்- சமையல் உதவியாளா்களுக்கு ரூ.3 லட்சம் பணிக்கொடையாக வழங்குதல், காலை உணவு திட்டத்தை மதிய உணவு திட்டத்தோடு இணைத்து சத்துணவு அமைப்பாளா்கள் மூலம் திட்டத்தை செயல்படுத்துதல், காலிப் பணியிடங்களை கால முறை ஊதியத்தில் நிரப்புதல், பத்தாம் வகுப்பு முடித்த சமையலா் - சமையல் உதவியாளா்களுக்கு அமைப்பாளராக பதவி உயா்வு வழங்குதல், மகப்பேறு விடுப்பினை பன்னிரண்டு மாதமாக உயா்த்துதல், ஆண் வாரிசுகளுக்கும் சத்துணவு பணி வழங்குதல் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.