செய்திகள் :

சயீஃப் அலிகான் வீட்டுக்குள் வெளிநபர் நுழைந்தது எப்படி?

post image

நடிகர் சயீஃப் அலிகான் வீட்டுக்குள் நுழைந்த வெளிநபர், கத்தியால் குத்தியதில், அவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவத்தில் ஈடுபட்டது யார், அவர் எப்படி வீட்டுக்குள் நுழைந்தார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.

பாலிவுட் நடிகர் சயீஃப் அலி கான் வீட்டுக்குள் வெளிநபர் ஒருவர், நுழைய முயன்றதை அவரது வீட்டுப் பணியாளர் தடுத்தபோது, அங்கே வந்த நடிகர் சயீஃப் அலிகானை, குற்றவாளி மறைத்து வைத்திருந்த கத்தியால் குத்திய சம்பவத்தில் அவருக்கு உடலில் 6 இடங்களில் காயங்கள் ஏற்பட்டுள்ளன.

நள்ளிரவு 2 மணியளவில் கத்திக்குத்து காயங்களுடன் சயீஃப் அலிகான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உடனடியாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. அவரது உடலில் இரண்டு மோசமான காயங்கள் ஏற்பட்டிருப்பதாகவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

54 வயதாகும் நடிகரின் வீடு, பாந்த்ராவில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பின் 11வது மாடியில் அமைந்துள்ளது.

நேற்று நள்ளிரவு வீட்டுக்குள் நுழைந்த கொள்ளையனால் சயீஃப் அலிகான், கத்தியால் குத்தப்பட்டதும், அவரது மகன், உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளி அங்கிருந்து தப்பியோடியிருக்கிறார்.

கொள்ளையன், அந்த வீட்டின் அவசரகால பயன்பாட்டுக்கான படிகட்டு வழியாக நேற்று இரவு அவரது வீட்டுக்குள் ஏறி வந்திருப்பதை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். வீட்டுப் பணியாளர் அவரைப் பார்த்து யார் என்று கேட்டபோது தகராறு ஏற்பட்டு, பணியாளரைத் தாக்க முயன்றபோது அதனைத் தடுக்கச் சென்ற சயீஃப் அலிகானை, குற்றவாளி கத்தியால் குத்தியதாகவும் கூறப்படுகிறது.

குற்றவாளி வீட்டுக்குள் கொள்ளையடிக்கும் நோக்கத்தோடு நுழைந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இது குறித்து வழக்குப் பதிவு செய்து, 10 தனிப்படைகள் அமைத்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் காவல்துறையினர் கூறியிருக்கிறார்கள்.

அவரது முதுகெலும்பில் கத்திக்குத்து காயம் ஏற்பட்டிருந்ததாகவும், உடனடியாக அவருக்கு அறுவைசிகிச்சை செய்து, முதுகெலும்பில் குத்தப்பட்டிருந்த 2.5 இஞ்ச் கத்தித் துண்டு அகற்றப்பட்டதாகவும், தற்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தில்லி பேரவைத் தேர்தல்: பாஜகவின் 4-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

தில்லி சட்டப்பேரவைத் தேர்தலுக்கான 4-ம் கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக இன்று வெளியிட்டுள்ளது. தில்லியில் 70 தொகுதிகளுக்கான சட்டப்பேரவை தேர்தல் வருகிற பிப். 5 அன்று ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. தேர்தல் முடி... மேலும் பார்க்க

தில்லி தேர்தல்: வேட்புமனு தாக்கல் செய்தார் மணீஷ் சிசோடியா!

தில்லியின் முன்னாள் துணை முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் வேட்பாளருமான மணீஷ் சிசோடியா இன்று தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார். 70 உறுப்பினர்களைக் கொண்ட தில்லி சட்டப்பேரவைக்கு அடுத்த மாதம் 5-ம் தேதி தே... மேலும் பார்க்க

போலி பங்கு வர்த்தக மோசடி: ரூ. 90 லட்சத்தை இழந்த ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி!

கேரளத்தில் ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவர் போலி பங்கு வர்த்தக மோசடியில் ரூ. 90 லட்சத்தை இழந்துள்ளார். கேரள உயர்நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதியான சசிதரன் நம்பியார் கொச்சியின் எரூர் பகுதியில் ... மேலும் பார்க்க

கும்பமேளா: முட்கள் மீது படுத்து அனைவரின் கவனத்தை ஈர்த்த துறவி!

உத்தரப் பிரதேசத்தின் பிரயாக்ராஜில் மகாகும்பமேளா தொடங்கியுள்ள நிலையில் முட்கள் மீது சர்வ சாதாரணமாக படுத்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார் துறவி ஒருவர். மேலும் பார்க்க

2 பிள்ளைகளுக்கு மேல் இருந்தால் தான் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட அனுமதி: ஆந்திர முதல்வர்

ஆந்திர மாநிலத்தில் ஒருவருக்கு இரண்டு பிள்ளைகளுக்கு மேல் இருந்தால் மட்டுமே உள்ளாட்சித் தேர்தலில் கவுன்சிலர் அல்லது மேயராக முடியும் என்று அந்த மாநில முதல்வர் என். சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார். இதுதொடர... மேலும் பார்க்க

8வது ஊதியக் குழு: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

புது தில்லி: அரசு ஊழியர்களுக்கான 8வது ஊழியக் குழுவை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.புது தில்லியில் இன்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் பல்வேறு ... மேலும் பார்க்க