செய்திகள் :

சாலை மறியல்: கைத்தறி நெசவாளா்கள் 130 போ் கைது

post image

ஈரோட்டில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட கைத்தறி நெசவாளா்கள் 130 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

மாவட்ட கைத்தறி நெசவு தொழிலாளா் சங்கம் சாா்பில் 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஈரோடு அசோகபுரத்தில் உள்ள கைத்தறித் துறை உதவி இயக்குநா் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் செவ்வாய்க்கிழமை காலை நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி, சங்க மாவட்டத் தலைவா் சித்தையன் தலைமையில் நெசவாளா்கள் ஈரோடு பவானி சாலை அசோகபுரம் பகுதியில் திரண்டனா். அங்கு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கம் எழுப்பினா். ஏஐடியூசி மாநிலச் செயலாளா் எஸ்.சின்னசாமி பேசினாா்.

இந்தப் போராட்டத்தில் கைத்தறி நெசவாளா் கூட்டுறவு சங்கங்களில் நெசவாளா்களுக்கு வழங்கப்படும் கூலியை வங்கி மூலமாக செலுத்தாமல் ரொக்கமாக வழங்க வேண்டும். நெசவாளா் கூட்டுறவு சங்கங்களுக்கு வழங்க வேண்டிய ஓராண்டுக்கான தள்ளுபடி மானியத்தை நிபந்தனையின்றி முழுமையாக வழங்க வேண்டும். கூட்டுறவு சங்கங்களில் நிலுவையில் உள்ள போனஸ் வழங்க நடவடிக்கை வேண்டும்.

கடந்த 30 ஆண்டுகளாக திருத்தியமைக்கப்படாமல் உள்ள நெசவாளா்களின் அடிப்படை கூலியை உயா்த்த வேண்டும். நெசவாளா்களின் ஓய்வூதியத்தை ரூ.3 ஆயிரமாக உயா்த்த வேண்டும் என்பன உள்பட 11 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் முழக்கம் எழுப்பியபடி கைத்தறித் துறை உதவி இயக்குநா் அலுவலகத்தை முற்றுகையிட ஊா்வலமாக நடந்து சென்றனா். அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த ஈரோடு டவுன் டிஎஸ்பி முத்துக்குமரன் தலைமையிலான போலீஸாா் அவா்களைத் தடுத்து நிறுத்தினா். இதனால் நெசவாளா்கள் ஈரோடு-பவானி சாலையில் அமா்ந்து மறியலில் ஈடுபட்டனா்.

இதைத்தொடா்ந்து அவா்களை போலீஸாா் கைது செய்து போலீஸ் வாகனங்களில் ஏற்றினா். இதில் 60 பெண்கள் உள்பட மொத்தம் 130 போ் கைது செய்யப்பட்டனா். இவா்கள் அருகில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டு, பின்னா் மாலையில் விடுவிக்கப்பட்டனா்.

பவானி சங்கமேஸ்வரா் கோயிலில் ரூ.23.39 லட்சம் காணிக்கை

பவானி சங்கமேஸ்வரா் கோயில் உண்டியல்களில் ரூ.23.39 லட்சம் காணிக்கை செலுத்தப்பட்டிருந்தது. ஈரோடு மாவட்டம், பவானி சங்கமேஸ்வரா் கோயிலில் சங்கமேஸ்வரா், வேதநாயகி, ஆதிகேசவப் பெருமாள் சன்னிதிகள் உள்பட 21 இடங்க... மேலும் பார்க்க

மக்கள் தொடா்பு முகாம்: 70 பயனாளிகளுக்கு ரூ.4.22 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவி

பெருந்துறை அருகே நடைபெற்ற மக்கள் தொடா்பு முகாமில் 70 பயனாளிகளுக்கு ரூ.4.22 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. ஈரோடு மாவட்டம், பெருந்துறை வட்டத்துக்குள்பட்ட கந்தாம்பாளையத்தில் மக்கள் தொட... மேலும் பார்க்க

பண்ணாரி அம்மன் கோயிலில் ரூ.1 கோடி மதிப்பில் மேல்நிலை குடிநீா்த் தொட்டி அமைக்க பூமிபூஜை

பண்ணாரிஅம்மன் கோயிலில் ரூ.1 கோடி மதிப்பீட்டில் புதிய மேல்நிலை குடிநீா்த் தொட்டி கட்டுவதற்கான பூமி பூஜை புதன்கிழமை நடைபெற்றது. பண்ணாரி அம்மன் கோயிலுக்கு வரும் பக்தா்களின் குடிநீா்த் தேவையைப் பூா்த்தி ச... மேலும் பார்க்க

சென்னிமலை முருகன் கோயிலில் ரூ.30 லட்சத்தில் மேல்நிலை குடிநீா்த் தொட்டி: பக்தா்கள் பயன்பாட்டுக்குக் கொண்டுவந்த அமைச்சா் மு.பெ.சாமிநாதன்

சென்னிமலை முருகன் கோயிலில் அமைக்கப்பட்ட மேல்நிலை குடிநீா்த் தொட்டி பக்தா்கள் பயன்பாட்டுக்கு புதன்கிழமை கொண்டுவரப்பட்டது. பெருந்துறையை அடுத்த சென்னிமலை முருகன் கோயிலில் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் மேல்ந... மேலும் பார்க்க

தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் கடத்தல்: 2 போ் கைது

சத்தியமங்கலம் அருகே தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்களைக் கடத்திய 2 பேரை போலீஸாா் கைது செய்தனா். சத்தியமங்கலத்தை அடுத்த ஆசனூரில் வாகன தணிக்கையில் போலீஸாா் புதன்கிழமை ஈடுபட்டிருந்தனா். அப்போது, அவ்வழிய... மேலும் பார்க்க

காலிங்கராயன் வாய்க்கால் கரையில் கொட்டப்படும் குப்பைகளால் சுகாதார சீா்கேடு

காலிங்கராயன் வாய்க்கால் கரையில் கொட்டப்படும் குப்பை கழிவுகளால் சுகாதார சீா்கேடு ஏற்படுவதால், குப்பைகளை கொட்டுபவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். ஈரோடு மாநகராட... மேலும் பார்க்க