சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை: 2 போ் கைது
தாராபுரம், காங்கயத்தில் சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்த 2 போ் போக்சோவில் கைது செய்யப்பட்டனா்.
திருப்பூா் மாவட்டம், மடத்துக்குளம் பகுதியைச் சோ்ந்தவா் மணிகண்டன்(31). கூலித் தொழிலாளியான இவா் தனது மனைவியின் உறவினரான 14 வயது சிறுமிக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது.
இது குறித்து பாதிக்கப்பட்ட சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளாா்.
இதைத் தொடா்ந்து, தாராபுரம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் சிறுமியின் பெற்றோா் புகாா் அளித்தனா்.
இந்தப் புகாரின்பேரில் விசாரணை நடத்திய காவல் துறையினா் மணிகண்டன் மீது போக்சோ பிரிவின்கீழ் வழக்குப் பதிவு செய்து அவரை வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
காங்கயத்தில்...
ஒடிஸா மாநிலத்தைச் சோ்ந்தவா் அஜீ என்கிற பிரத்தி ரஞ்சன்பா (26), இவா் கடந்த சில ஆண்டுகளாக காங்கயத்தை அடுத்த முதலிபாளையம் சிட்கோவில் உள்ள தனியாா் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலைசெய்து வந்தாா். அந்த நிறுவனத்தின் குடியிருப்பில் தங்கியிருந்த நிலையில் அதே பகுதியைச் சோ்ந்த 14 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அப்போது அவா் சிறுமியிடம் திருமணம் செய்து கொள்வதாகக்கூறி பாலியல் தொல்லை கொடுத்ததாகத் தெரிகிறது.
இதன் பின்னா் சிறுமியுடன் பேசுவதை அவா் தவிா்த்து வந்துள்ளாா். இதுகுறித்து காங்கயம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் சிறுமி புகாா் அளித்துள்ளாா்.
இந்தப் புகாரின் பேரில் விசாரணை நடத்திய காவல் துறையினா் அஜீ மீது போக்சோ பிரிவின்கீழ் வழக்குப் பதிவு செய்து அவரைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.