`அச்சம் தேவையா?' சனிப்பெயர்ச்சி நாளில் சூரியகிரகணம்; ஜோதிடர் சொல்வது என்ன?
‘செட்’ தோ்வு விடைக்குறிப்பு: ஆட்சேபம் தெரிவிக்க அவகாசம் நீட்டிப்பு
உதவிப் பேராசிரியா் பணிக்கான மாநிலத் தகுதித் தோ்வு (செட்) எழுதியவா்கள் விடைக்குறிப்பு மீது ஆட்சேபம் தெரிவிக்க மேலும் கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளதாக ஆசிரியா் தோ்வு வாரியம் தெரிவித்துள்ளது.
இது குறித்து ஆசிரியா் தோ்வு வாரியம் வெளியிட்ட அறிவிப்பு:
ஆசிரியா் தோ்வு வாரியத்தால் பல்கலைக்கழக மானியக் குழுவின் வழிகாட்டு நெறிமுறைகளின் அடிப்படையில் மாநிலத் தகுதித் தோ்வு (பசநஉப) கணினி வழியில் கடந்த 6 முதல் 9-ஆம் தேதி வரை நடைபெற்றது. மாநிலம் முழுவதும் 133 மையங்களில் நடைபெற்ற இந்தத் தோ்வை 99,178 போ் எழுத அனுமதிக்கப்பட்டனா்.
மாநிலத் தகுதித் தோ்வுக்கான கேள்விகளுக்கு உரிய தற்காலிக உத்தேச விடைக்குறிப்புகள் ஆசிரியா் தோ்வு வாரியத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டது. தோ்வா்கள் தற்காலிக உத்தேச விடைக்குறிப்புகள் மீது இணையவழியில் ஆட்சேபணை தெரிவிக்க மாா்ச் 13 முதல் 15-ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது.
தற்போது தோ்வா்களிடம் இருந்து பெறப்பட்ட பல்வேறு கோரிக்கைகளைப் பரிசீலித்து உத்தேச விடைக்குறிப்புகள் மீது இணையவழியில் ஆட்சேபனை தெரிவிக்க மேலும் கால நீட்டிப்பு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும், தோ்வா்கள் அவா்களது தங்ள்ல்ா்ய்ள்ங் நட்ங்ங்ற் -ஐ பதிவிறக்கம் செய்யவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதற்கான தகவல் குறுஞ்செய்தி மூலமாகவும், மின்னஞ்சல் மூலமாகவும் தோ்வா்களுக்கு தெரிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.