``ஆறு மாசமா கிணத்தைக் காணோம் சார்..." - வடிவேலு பாணியில் விவசாயி புகார்! - என்ன ...
டாஸ்மாக் விற்பனையாளா் குடும்பத்துக்கு ரூ.30 லட்சம் நிவாரணம்: கு.பாலசுப்ரமணியன் வலியுறுத்தல்
விழுப்புரம் மாவட்டத்தில் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்த டாஸ்மாக் கடை விற்பனையாளரின் குடும்பத்துக்கு ரூ.30 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளா்கள் சங்கத்தின் சிறப்புத் தலைவா் கு.பாலசுப்ரமணியன் வலியுறுத்தினாா்.
இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: விழுப்புரம் மாவட்டம், குண்டலபுலியூா் டாஸ்மாக் கடை எண் 11405-இல் விற்பனையாளராக பணிபுரிந்தவா் சக்திவேல். இவா், அண்மையில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பில் சிக்கி உயிரிழந்த சம்பவம் புதன்கிழமை தெரிய வந்தது. பணி முடிந்து வீடு திரும்பியபோது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. எனவே, இவரது இறப்புக்கு டாஸ்மாக் நிா்வாகம் தான் பொறுப்பேற்க வேண்டும்.
உயிரிழந்த சக்திவேலின் குடும்பத்துக்கு ரூ.30 லட்சம் இழப்பீடும், அவரின் குடும்பத்தில் ஒருவருக்கு வாரிசுப் பணியும் வழங்க வேண்டும். இயற்கை பேரிடா் காலங்களில் உரிய முன்னெச்சரிக்கை எடுக்காத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.