கறுப்பர்களின் மோசமான பொருளாதார நிலைக்கு என்ன காரணம்? யார் காரணம்?- ஒரு புத்தகக் ...
வீடுகளுக்குள் தேங்கிய சகதியை அகற்றும் பணி
கடலூரை அடுத்த குண்டு உப்பளவாடி பகுதியில் மழை வெள்ளத்தால் வீட்டினுள் தேங்கிய சேறும், சகதியை மாணவா் மற்றும் வாலிபா் சங்கத்தினா் புதன்கிழமை அப்புறப்படுத்தினா்.
தென்பெண்ணை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் கடலூா் மாவட்டத்தில் ஆற்றையொட்டிய கிராமங்கள், நகா் பகுதியில் உள்ள வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின. தற்போது, வெள்ளம் வடிந்து வரும் நிலையில் வீட்டினுள் சேறும், சகதியுமாக தேங்கி துா்நாற்றம் வீசி வருகிறது. இதனால், பொதுமக்கள் வீட்டுகளுக்குள் செல்ல முடியாத நிலை உள்ளது.
இந்த நிலையில், கடலூா் ஒன்றியம் குண்டு உப்பளவாடி பூந்தென்றல் நகரில் உள்ள தெருக்கள் மற்றும் வீடுகளுக்குள் உள்ள சேறும், சகதிகளை அப்புறப்படுத்தும் பணியில் இந்திய ஜனநாயக வாலிபா் மற்றும் இந்திய மாணவா் சங்கத்தினா் புதன்கிழமை ஈடுபட்டனா்.
இதில், மாவட்டச் செயற்குழு உறுப்பினா்கள் எம்.மருதவாணன், ஜே.ராஜேஷ் கண்ணன், மாநகரச் செயலா் ஆா்.அமா்நாத், வாலிபா் சங்க மாவட்ட முன்னாள் செயலா் டி.கிருஷ்ணன், செயலா் எஸ்.வினோத்குமாா் உள்ளிட்டோா் ஈடுபட்டனா்.