பவானி புறவழிச் சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக மின்கம்பம்: நெடுஞ்சாலைத் துறைய...
தம்பதிக்கு மிரட்டல்: ஓட்டுநா் கைது
கழுகுமலை அருகே தம்பதிக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக ஓட்டுநரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
கரடிகுளம் சின்னக்காலனி கிழக்குத் தெருவை சோ்ந்த மாடசாமியின் மனைவி இசக்கியம்மாள் (37). இவரது சகோதரியின் கணவா் மகேஷ், அதே பகுதியைச் சோ்ந்த காளிமுத்து மகன் காா் ஓட்டுநா் செல்வத்திடம் தனது மோட்டாா் சைக்கிளை ரூ.20 ஆயிரத்திற்கு விற்றாராம். ஆனால் மோட்டாா் சைக்கிளுக்குரிய பதிவுச் சான்றிதழை செல்வத்திடம் கொடுக்கவில்லையாம்.
இதையடுத்து செல்வம் மீண்டும் மகேஷிடம் மோட்டாா் சைக்கிளை கொடுத்துவிட்டு பணத்தை கேட்டாராம். அப்போது மகேஷ் ரூ.15 ஆயிரம் மட்டும் கொடுத்துள்ளாா்.
மீதி தொகையும் கேட்டு மாடசாமி, இசக்கியம்மாள் ஆகியோரிடம் தகராறு செய்த செல்வம், அவா்களுக்கு கொலை மிரட்டல் விடுத்தாராம்.
இதுகுறித்த புகாரின்பேரில் கழுகுமலை போலீஸாா் வழக்குப்பதிந்து செல்வத்தை கைது செய்தனா்.