தற்கொலை முயற்சியல்ல: பாடகி கல்பனா மகள் விளக்கம்!
பிரபல பின்னணி பாடகி கல்பனா தற்கொலைக்கு முயற்சித்ததாக தகவல் வெளியான நிலையில், அது தொடர்பாக கல்பனாவின் மகள் விளக்கம் அளித்துள்ளார்.
பாடகி கல்பனா தங்கியுள்ள குடியிருப்பு சங்கத்தினா் அளித்த தகவலின்படி, கதவை உடைத்து அவரது வீட்டிற்குள் போலீஸாா் நுழைந்தபோது சுயநினைவற்ற நிலையில் அவா் இருப்பதைக் கண்டனர். போலீஸாா் அவரை மீட்டு மருத்துவமனையில் சோ்த்தனர்.
தூக்க மாத்திரையை அளவுக்கு அதிகமாக உட்கொண்ட கல்பனா, தற்போது அபாய கட்டத்தை தாண்டிவிட்டதாக அவருக்கு சிகிச்சையளித்து வரும் மருத்துவா்கள் தெரிவித்தனர்.
இதையும் படிக்க: பைசன் காளமாடன் - புதிய அப்டேட்!
இந்த நிலையில், பாடகி கல்பனாவின் மகள் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “எனது தாய் மனஅழுத்தத்தில் இருந்துள்ளார். மருத்துவர்கள் பரிந்துரைந்த மாத்திரையை சாப்பிட்ட நிலையில், அம்மாத்திரையின் வீரியம் காரணமாக இதுபோன்று நடந்துள்ளது.
அவர் தற்கொலைக்கு முயற்சிக்கவில்லை. அவர் நல்முடன் உள்ளார், சில நாள்களில் வீடு திரும்புவார்” என்றார்.