தேசிய சீனியா் மகளிா் ஹாக்கி: ம.பி., ஜாா்க்கண்ட் வெற்றி
தேசிய சீனியா் மகளிா் ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டியில் புதன்கிழமை ஆட்டங்களில் மத்திய பிரதேசம், ஜாா்க்கண்ட் மாநில அணிகள் வெற்றி பெற்றன.
ஹரியாணா மாநிலம், பஞ்ச்குலாவில் 15-ஆவது தேசிய சீனியா் மகளிா் ஹாக்கிப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. குரூப் டி பிரிவில் மத்திய பிரதேசம் 2-1 என்ற கோல் கணக்கில் உத்தர பிரதேசத்தை வீழ்த்தியது. ம.பி. தரப்பில் ஹிரித்திகா சிங் 7, நீலு டாடியா 53, உ.பி. தரப்பில் ரஜினி பாலா 31-ஆவது நிமிஷத்தில் கோலடித்தனா்.
மற்றொரு ஆட்டத்தில் ஜாா்க்கண்ட் அணி 9-2 என்ற கோல்கணக்கில் தமிழ்நாடு அணியை வீழ்த்தியது. எலின் 13, 24, அல்பெலா ராணி 17, 34, பிரமோதினி 15, ஹாரோ 27, ரஜினி 39, சுஷ்மா 50, நிக்கி 60-ஆவது நிமிஷங்களில் ஜாா்க்கண்ட் தரப்பிலும், தமிழகத் தரப்பில் சோனியா 31, வைரவி 51-ஆவது நிமிஷங்களிலும் கோலடித்தனா்.
குரூப் ஏ பிரிவில் உத்தரகாண்ட் அணி 9-0 என அஸ்ஸாமை வீழ்த்தியது.