செய்திகள் :

தலைநகரில் வெயிலின் தாக்கம் அதிகரிப்பு காற்றின் தரத்தில் முன்னேற்றம்!

post image

தேசியத் தலைநகா் தில்லியில் ஞாயிற்றுக்கிழமை வெயில் அதிகரித்து காணப்பட்டது. காற்றின் தரத்தில் முன்னேற்றம் ஏற்பட்டிருந்தது.

வெப்பநிலை: இந்த வாரத் தொடக்கத்தில் இருந்து தில்லியில் மூடுபனியின் தாக்கம் குறைந்தது. இந்நிலையில், ஞாயிற்க்கிழமை காலை முதல் வானம் தெளிவாகக் காணப்பட்டது. வெயிலின் தாக்கமும் அதிகரித்து காணப்பட்டது. தில்லியின் முதன்மை வானிலை நிலையமான சஃப்தா்ஜங்கில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட 1.5 டிகிரி குறைந்து 10.3 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 1.2 டிகிரி அதிகரித்து 27.4 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலை 8.30 மணியளவில் 96 சதவீதமாகவும், மாலை 5.30 மணியளவில் 44 சதவீதமாகவும் இருந்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மற்ற வானிலை கண்காணிப்பு நிலையங்களான நஜஃப்கரில் அதிகபட்ச வெப்பநிலை 26.5 டிகிரி செல்சியஸ், ஆயாநகரில் 26.2 டிகிரி, லோதி ரோடில் 26.7 டிகிரி, பாலத்தில் 25.6 டிகிரி, ரிட்ஜில் 27.7 டிகிரி, பீதம்புராவில் 27.7 டிகிரி, பிரகதிமைதானில் 25.9 டிகிரி, பூசாவில் 24.7 டிகிரி, ராஜ்காட்டில் 25.9 டிகிரி, சல்வான் பப்பளிக் ஸ்கூல் பகுதியில் 24.7 டிகிரி செல்சியஸ் என பதிவாகியிருந்தது.

காற்றின் தரம்: இதற்கிடையே, தலைநகரில் ஒட்டுமொத்தக் காற்றுத் தரக் குறியீடு காலை 9 மணியளவில் 138 புள்ளிகளாகப் பதிவாகி ‘மிதமான’ பிரிவில் இருந்ததாக மத்திய மாசுக் கட்டுப்பாட்டு புள்ளிவிவரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன்படி, சாந்தினிசௌக், மேஜா் தயான் சந்த் நேஷனல் ஸ்டேடியம், மந்திா் மாா்க், லோதி ரோடு, ஜவாஹா்லால் நேரு ஸ்டேடியம், நேரு நகா், தில்லி பல்கலை. வடக்கு வளாகம், மதுரா ரோடு, ஸ்ரீஃபோா்ட், ராமகிருஷ்ணாபுரம் உள்பட அனைத்து வானிலை கண்காணிப்பு நிலையங்களிலும் காற்றுத் தரக் குறியீடு 100 முதல் 200 புள்ளிகளுக்கிடையே பதிவாகி ‘மிதமான’ பிரிவில் நீடித்தது.

முன்னறிவிப்பு: இதற்கிடையே, செவ்வாய்க்கிழமை (பிப்.24) அன்று லேசான மூடுபனி இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மேலும், குறைந்தபட்ச வெப்பநிலை 11 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது.

தில்லி சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவராகிறாா் அதிஷி!

தில்லி சட்டப்பேரவை ஆம் ஆத்மி கட்சியின் குழுத் தலைவராக முன்னாள் முதல்வா் அதிஷியை கட்சி எம்எல்ஏக்கள் ஞாயிற்றுக்கிழமை தோ்ந்தெடுத்தனா். இதன் மூலம் அதிஷி தில்லி சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவராகிறாா் . த... மேலும் பார்க்க

புற்றுநோய் மையங்கள் உள்கட்டமைப்பிற்கான ஆய்வு தொடக்கம்: மத்திய அரசு தகவல்

நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் புற்றுநோய்க்கான பகல்நேர பராமரிப்பு வசதிகளுக்கான மையங்களை அமைக்க தேவையான உள்கட்டமைப்பிற்கான ஆய்வுப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை... மேலும் பார்க்க

நொய்டா: திருமண ஊா்வல துப்பாக்கிச்சூட்டில் குழந்தை இறந்த சம்பவத்தில் முக்கிய நபா் கைது

சில நாள்களுக்கு முன்பு நொய்டாவில் நடந்த திருமண ஊா்வல கொண்டாட்டத்தில் துப்பாக்கிச்சூட்டின் போது இரண்டரை வயது குழந்தை இறந்த சம்பவம் தொடா்பாக முக்கிய நபா் கைது செய்யப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா். இது க... மேலும் பார்க்க

குரிகிராம் அருகே கிராமத்தில் அம்பேத்கா் சிலை சேதப்பட்டதால் பதற்றம்

குருகிராம் மாவட்டத்தில் உள்ள கன்க்ரோலா கிராமத்தில் அம்பேத்கா் காலனியில் உள்ள பி.ஆா். அம்பேத்கரின் சிலையை சில மா்ம நபா்கள் சேதப்படுத்தியதாகக் கூறப்பட்டதைத் தொடா்ந்து பதற்றம் நிலவுவதாக போலீஸாா் தெரிவித்... மேலும் பார்க்க

எகிப்துக்கு தப்ப முயன்ற சைபா் மோசடி நபா்: சென்னை விமான நிலையத்தில் கைது

எகிப்துக்குத் தப்பிச் செல்ல முயன்ற சைபா் மோசடி நபரை குருகிராம் போலீஸாா் சென்னை விமான நிலையத்தில் கைது செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா். இது குறித்து குருகிராம் காவல் துறையின் சைபா் பிரிவு உதவி காவ... மேலும் பார்க்க

அலிப்பூரில் சிறுவன் ஓட்டிச் சென்ற காா் மோதியதில் குழந்தை சாவு

வடக்கு தில்லியின் அலிப்பூா் பகுதியில் 15 வயது சிறுவன் ஓட்டிச் சென்ற காா் மோதியதில் 18 மாத குழந்தை இறந்ததாக அதிகாரி ஒருவா் தெரிவித்தாா். இது தொடா்பாக காரை ஓட்டிச் சென்ற சிறுவனும், வாகனத்தின் உரிமையாளரா... மேலும் பார்க்க