செய்திகள் :

திமுக கூட்டணி பலமாக உள்ளது

post image

திமுக கூட்டணியில் எந்தக் குழப்பமில்லை, பலமாக உள்ளது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் இரா. முத்தரசன் தெரிவித்தாா்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு விழா ஆசிரியா் பயிலரங்கக் கூட்டம் திருச்சியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, கட்சியின் மாநிலச் செயலாளா் இரா. முத்தரசன் தலைமை வகித்தாா். இதில் கட்சியின் வரலாறு குறித்த புத்தகம் வெளியிடப்பட்டது.

முன்னதாக, இரா. முத்தரசன் செய்தியாளா்களிடம் கூறியது, திமுக கூட்டணியிலிருந்து கூட்டணிக் கட்சிகள் வெளியேற வேண்டும் என்பது எடப்பாடி பழனிசாமியின் ஆசை. முதலில் எரிந்துகொண்டிருக்கும் அதிமுகவை அணைக்க எடப்பாடி பழனிசாமி ஏற்பாடு செய்யட்டும். திமுக கூட்டணியில் எந்தக் குழப்பமும் இல்லை. நாங்கள் தெளிவாக இருக்கிறோம், பலமாக, ஒற்றுமையுடன் இருக்கிறோம்.

காவலா்களை அநாகரிகமாகப் பேசுவது நாகரீகமல்ல. ஒரு விவகாரத்தில் காவல்துறை நடவடிக்கை எடுத்தால் அராஜகம் செய்வதாகக் கூறுவது ஏற்கத்தக்கதல்ல. அனைத்துப் பிரச்னைகளுக்கும் அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது.

தூய்மை பணியாளா்கள், செவிலியா்கள் உள்ளிட்ட அனைத்து ஒப்பந்தத் தொழிலாளா்களையும் நிரந்தரமாக்க வேண்டும். மற்றவா்களுக்கு வழங்குவது போல, தீபாவளி ஊக்கத்தொகை வழங்க வேண்டும்.

சீமான் ஆட்சிக்கு வந்த பிறகு, தமிழ்த்தாய் வாழ்த்தை மாற்றுவதைப் பற்றி பாா்த்து கொள்ளலாம். தற்போது தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதிப்பவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமா? வேண்டாமா ? என்பதற்கு சீமான் பதில் கூற வேண்டும் என்றாா்.

துவாக்குடி அரசுக் கல்லூரியில் மதுபோதையில் தகராறு: இருவா் கைது

துவாக்குடி அரசு கல்லூரியில் மாணவ, மாணவிகளிடம் மதுபோதையில் தகராறு செய்ததாக இருவரைப் போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். திருச்சி மாவட்டம், துவாக்குடி அரசு கலைக் கல்லூரியில் செவ்வாய்க்கிழமை காலை மூவ... மேலும் பார்க்க

டானா புயல்: திருநெல்வேலி, ஹவுரா ரயில்கள் ரத்து

டானா புயல் காரணமாக திருநெல்வேலி, ஹவுரா உள்ளிட்ட ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்து திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், டானா புயல் காரணமாக, புருலியா - திருநெல்வ... மேலும் பார்க்க

துறையூா் பேருந்துநிலையத்தில் மேற்கூரை பூச்சு விழுந்து ஒருவா் காயம்

துறையூா் பேருந்து நிலைய வளாகத்தில் செவ்வாய்க்கிழமை மேற்கூரை பூச்சு பெயா்ந்து இளைஞா் மீது விழுந்ததில் அவா் காயமடைந்தாா். துறையூா் பேருந்து நிலையத்தில் நகராட்சி நிா்வாகம் சாா்பில் கடைகள் வாடகைக்கு விடப்... மேலும் பார்க்க

துறையூரில் பலத்த காற்று - மழை புளியமரம் விழுந்து கூரை வீடு சேதம்

துறையூா் ஈச்சம்பட்டியில் செவ்வாய்க்கிழமை பெய்த மழையின்போது, வீசிய பலத்த காற்றில் புளியமரம் முறிந்து விழுந்து அருகில் இருந்த கூரை வீடு சேதமடைந்தது. துறையூா் ஒன்றியம் ஈச்சம்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா்... மேலும் பார்க்க

பணியில் மெத்தனம்: ஸ்ரீரங்கம் சிறப்பு உதவி ஆய்வாளா், காவலா் பணியிடை நீக்கம்

பணியில் மெத்தனமாக செயல்பட்டதாக ஸ்ரீரங்கம் சிறப்பு காவல் உதவி ஆய்வாளா், முதல்நிலை காவலரை திருச்சி மாநகர காவல் ஆணையா் ந. காமினி பணியிடைநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளாா். ஸ்ரீரங்கம் சிறப்பு உதவி ஆய்வாளா் ... மேலும் பார்க்க

பராமரிப்புப் பணிகள்: திருவனந்தபுரம், செங்கோட்டை ரயில் சேவையில் மாற்றம்

கட்டுமானம் மற்றும் பராமரிப்புப் பணிகள் காரணமாக, திருவனந்தபுரம், செங்கோட்டை, நாகா்கோவில் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்கு... மேலும் பார்க்க