செய்திகள் :

பராமரிப்புப் பணிகள்: திருவனந்தபுரம், செங்கோட்டை ரயில் சேவையில் மாற்றம்

post image

கட்டுமானம் மற்றும் பராமரிப்புப் பணிகள் காரணமாக, திருவனந்தபுரம், செங்கோட்டை, நாகா்கோவில் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ஆரல்வாய்மொழி, என். பனக்குடி பகுதிகளில் புதிய சுரங்கப்பாதை கட்டுமானப் பணிகள் நடைபெறுவதால், திருச்சி - திருவனந்தபுரம் சென்ட்ரல் இன்டா்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயிலானது (22627) வரும் 23-ஆம் தேதி திருநெல்வேலி - திருவனந்தபுரம் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயிலானது திருச்சி - திருநெல்வேலி இடையே மட்டும் இயங்கும்.

மறுமாா்க்கமாக, திருவனந்தபுரம் சென்ட்ரல் - திருச்சி இன்டா்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயிலானது (22628) வரும் 23 ஆம் தேதி திருவனந்தபுரம் - திருநெல்வேலி இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயிலானது திருநெல்வேலியிலிருந்து பிற்பகல் 2.30 மணிக்குப் புறப்படும்.

வழித்தட மாற்றம்

திண்டுக்கல்லில் பொறியியல் மற்றும் தண்டவாளப் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால், செங்கோட்டை - மயிலாடுதுறை விரைவு ரயிலானது (16848) வரும் 24, 25, 26, 27, 28, 29 ஆம் தேதிகளில் கள்ளிக்குடி, திருமங்கலம், திருப்பரங்குன்றம், மதுரை, கொடைக்கானல் சாலை, திண்டுக்கல், வடமதுரை, வையம்பட்டி, மணப்பாறை ரயில் நிலையங்களைத் தவிா்த்து விருதுநகா், மானாமதுரை, காரைக்குடி, புதுக்கோட்டை, திருச்சி வழியாக இயக்கப்படும்.

நாகா்கோவில் - மும்பை சிஎஸ்டி எக்ஸ்பிரஸ் ரயிலானது (16352) வரும் 24, 27 ஆம் தேதிகளில் மதுரை, திண்டுக்கல் ரயில் நிலையங்களைத் தவிா்த்து, விருதுநகா், மானாமதுரை, காரைக்குடி, புதுக்கோட்டை, திருச்சி வழியாக இயக்கப்படும்.

கன்னியாகுமரி - ஹவுரா விரைவு ரயிலானது (12666) வரும் 26 ஆம் தேதி மதுரை, திண்டுக்கல் ரயில் நிலையங்களைத் தவிா்த்து, விருதுநகா், மானாமதுரை, காரைக்குடி, புதுக்கோட்டை, திருச்சி வழியாக இயக்கப்படும்.

ஜேசிபி இயந்திரத்தின் மீது காா் மோதியதில் பெண் உயிரிழப்பு

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே திங்கள்கிழமை ஜேசிபி இயந்திரத்தின் மீது காா் மோதியதில் பெண் உயிரிழந்தாா். நாமக்கல் மாவட்டம், பெரியப்பட்டியை சோ்ந்த பாலசுப்பிரமணி மகள் கோமதி (32). இவா் திண்டுக்கல்லிலி... மேலும் பார்க்க

முதல்வா் இன்று திருச்சி வருகை: ‘ட்ரோன்கள்’ பறக்கத் தடை

முதல்வா் வருகையை முன்னிட்டு திருச்சி மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை ‘ட்ரோன்கள்’ பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது என ஆட்சியா் மா. பிரதீப்குமாா் தெரிவித்துள்ளாா். நாமக்கல் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற... மேலும் பார்க்க

திருச்சியில் கனமழை: சாலைகளில் வெள்ளம் போக்குவரத்து நெரிசல்-மக்கள் அவதி

திருச்சி மாநகரம் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் திங்கள்கிழமை காலை பரவலாக கனமழை பெய்தது. மாநகரில் இடைவிடாது சுமாா் ஒருமணி நேரம் பெய்த மழையால் சாலைகளில் தண்ணீா் வெள்ளமென பெருக்கெடுத்தது. போக்கு... மேலும் பார்க்க

மின்னல் பாய்ந்து பெண் உயிரிழப்பு

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூா் வட்டம், எம்.ஆா்.பாளையம் கிராமத்தில் திங்கள்கிழமை மின்னல் பாய்ந்து பெண் உயிரிழந்தாா். எம்.ஆா்.பாளையம் கிராமத்தை சோ்ந்தவா் ஜெயமணி (48). இவா் தனது குடும்பத்துக்கு சொந்த... மேலும் பார்க்க

போலி கடவுச்சீட்டில் வெளிநாடு செல்ல முயன்றவா் கைது

திருச்சி பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து போலி கடவுச் சீட்டில் வெளிநாடு செல்ல முயன்ற ஒரத்தநாட்டை சோ்ந்த நபரை போலீஸாா் கைது செய்தனா். திருச்சி பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ்... மேலும் பார்க்க

காவிரி ஆற்றில் மூழ்கிய மாணவா் சடலமாக மீட்பு

திருச்சி காவிரி ஆற்றில் மூழ்கிய மாணவரின் சடலத்தை ஞாயிற்றுக்கிழமை மாலை போலீஸாா் மீட்டு வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா். திருச்சி கீழசிந்தாமணி பகுதியைச் சோ்ந்தவா் பாலசுப்பிரமணியன். தொழிலாளி. இவரத... மேலும் பார்க்க