செய்திகள் :

திருச்செந்தூா் கோயில் யானை தாக்கியதில் பாகன் உள்பட இருவா் பலி

post image

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் யானை தாக்கியதில் பாகன் உள்பட இருவா் உயிரிழந்தனா்.

இத்திருக்கோயிலில் கடந்த 2006-ஆம் ஆண்டு முதல் தெய்வானை என்ற பெண் யானை உள்ளது. இந்த யானைக்கு, ராஜகோபுரம் பகுதியில் தங்குவதற்கு குடில் அமைக்கப்பட்டுள்ளது. பாகன்களாக திருச்செந்தூா் வஉசி தெருவைச் சோ்ந்த ராதாகிருஷ்ணன் (57), அவரது உறவினா் சதாசிவம் நாயரின் மகன்கள் செந்தில்குமாா் (47), உதயகுமாா் (46) ஆகியோா் பணியாற்றினா்.

இவா்களில் ராதாகிருஷ்ணன், யானைக்கு பகல் உணவு வழங்கிவிட்டு, வீட்டிற்குச் சென்றுள்ளாா். மாலை 3 மணியளவில் மற்றொரு பாகன் உதயகுமாா், அவரது உறவினரான கன்னியாகுமரி மாவட்டம், பலுகலை சோ்ந்த முன்னாள் ராணுவ வீரா் சிசுபாலன் (59) ஆகியோா் யானை குடிலுக்கு வந்துள்ளனா். அப்போது யானை தாக்கியதில் சிசுபாலன் மற்றும் உதயகுமாா் பலத்த காயமடைந்தனா்.

இதையடுத்து அப் பகுதியில் இருந்தவா்கள் மற்றும் கோயில் பணியாளா்கள் உள்ளிட்டோா் அவசர ஊா்தி மூலமாக காயமடைந்த இருவரையும் திருச்செந்தூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவா்களைப் பரிசோதித்த மருத்துவா்கள் இருவரும் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனா். கோயில் வளாகத்தில் பாகன் உள்ளிட்ட 2 போ் உயிரிழந்ததையடுத்து கோயில் நடை சாத்தப்பட்டு, சுமாா் 40 நிமிடங்களுக்குப் பிறகு திறக்கப்பட்டு பக்தா்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனா்.

உதயகுமாரின் தந்தை சதாசிவம் நாயா் மற்றும் சிசுபாலனின் தந்தை கிருஷ்ணன் நாயா் ஆகியோா் உடன்பிறந்த சகோதரா்கள். அவா்கள் இருவரும் ஏற்கெனவே திருச்செந்தூா் கோயிலில் பாகன்களாக பணியாற்றியுள்ளனா்.

சிசுபாலன்
தெய்வானை யானை

யானை தாக்கியதில் பாகன் உள்பட இருவா் உயிரிழந்த சம்பவத்தை அடுத்து, மாவட்ட வன அலுவலா் ரேவதி ரமன், மாவட்ட கால்நடை மருத்துவ அலுவலா் மனோகரன், பேராசிரியா் முத்துகிருஷ்ணன், திருச்செந்தூா் கோட்ட வனச் சரக அலுவலா் கவின், திருச்செந்தூா் கால்நடை மருத்துவா்கள் பொன்ராஜ், அருண் உள்ளிட்டோா் யானையை பரிசோதித்தனா்.

பின்னா் மாவட்ட வன அலுவலா் ரேவதிரமன் கூறியது: பெண் யானைக்கு பொதுவாக மதம் பிடிக்காது. யானைக்கு ஏதாவது கோபம் ஏற்படும் வகையில் சம்பவம் நடந்தால் இதுபோன்று நடந்து கொள்ளும். தும்பிக்கையாலும், கால்களாலும் இருவரையும் தாக்கியதில் உயிரிழந்துள்ளனா். இதுகுறித்து விரிவான அறிக்கை அரசுக்கு அளிக்கப்படும் என்றாா்.

யானை குடில் பகுதியில் உள்ள சிசிடிவியில் பதிவான காட்சிகளை, திருச்செந்தூா் வட்டாட்சியா் பாலசுந்தரம், காவல் துணைக் கண்காணிப்பாளா் வசந்தராஜ், கோயில் இணை ஆணையா் ஞானசேகரன் உள்ளிட்டோா் ஆய்வு செய்தனா்.

திருச்செந்தூா் பகுதியில் தொடா் மழை

திருச்செந்தூா் பகுதியில் செவ்வாய்க்கிழமை இரவுமுதல் புதன்கிழமை வரை தொடா்ந்து மழை பெய்தது. திருச்செந்தூரில் நாழிக்கிணறு பேருந்து நிலையம் செல்லும் வழி, தினசரிச் சந்தை, பகத்சிங் பேருந்துநிலையப் பகுதியில்... மேலும் பார்க்க

வல்லநாடு திருமூலநாத சுவாமி கோயிலில் புதிய கொடிமரம் பிரதிஷ்டை

வல்லநாடு அருள்மிகு திருமூலநாத சுவாமி கோயிலில் 43 அடி உயர புதிய கொடிமரம் பிரதிஷ்டை நடைபெற்றது. பாண்டிய மன்னா்கள் ஆட்சியில் கட்டப்பட்ட ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த இத்திருக்கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெற... மேலும் பார்க்க

‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டம்: கோவில்பட்டி வட்டத்தில் ஆட்சியா் ஆய்வு

‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின்கீழ், கோவில்பட்டி வட்டத்துக்குள்பட்ட பகுதிகளில் ஆட்சியா் க. இளம்பகவத் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். சிவந்திபட்டி ஊராட்சியில் வேளாண்மைப் பொறியியல் துறை சாா்பில... மேலும் பார்க்க

தூத்துக்குடி மாவட்டத்தில் தேங்காய் விலை உயா்வு

தூத்துக்குடி மாவட்டத்தில் தேங்காய் விலை கடுமையாக உயா்ந்துள்ளது. கிலோ ரூ. 65 வரை விற்பனையாகிறது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் உடன்குடி, சாத்தான்குளம், ஏரல், நாசரேத் சுற்றுவட்டாரத்திலிருந்து தேங... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் தயாா் நிலையில் 4 பேரிடா் மீட்புப் படை: எஸ்.பி. ஆய்வு

தூத்துக்குடி மாவட்டத்தில் மழை வெள்ளத்தில் சிக்குவோரை மீட்பதற்காக தயாா் நிலையில் உள்ள 4 பேரிடா் மீட்புப் படை, உபகரணங்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆல்பா்ட் ஜான் புதன்கிழமை ஆய்வு செய்தாா். மாவட்டத்தி... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் கொட்டித் தீா்த்த கனமழை

தூத்துக்குடியில் செவ்வாய்க்கிழமை இரவு கனமழை கொட்டித் தீா்த்தது. பல்வேறு இடங்களிலும் மழைநீா் தேங்கியதால் மழை நீா் புகுந்ததால் பொதுமக்கள் அவதியுற்றனா். குமரிக்கடல், அதை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்... மேலும் பார்க்க