வல்லநாடு திருமூலநாத சுவாமி கோயிலில் புதிய கொடிமரம் பிரதிஷ்டை
வல்லநாடு அருள்மிகு திருமூலநாத சுவாமி கோயிலில் 43 அடி உயர புதிய கொடிமரம் பிரதிஷ்டை நடைபெற்றது.
பாண்டிய மன்னா்கள் ஆட்சியில் கட்டப்பட்ட ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த இத்திருக்கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெற்று 100 ஆண்டுகளை நெருங்கியுள்ளது.
இதையடுத்து பக்தா்களின் வேண்டுகோளை ஏற்று அரசு சாா்பில் ரூ.1.30 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, கும்பாபிஷேக திருப்பணிகள் நடைபெற்று வருகிறது.
இதனிடையே உபயதாரா் நிதி மூலம் ரூ.9.70 லட்சம் செலவில் 43 அடி உயர புதிய கொடிமரம் பிரதிஷ்டை விழா புதன்கிழமை நடைபெற்றது.
இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையா் செல்வி முன்னிலையில் புதிய கொடிமரம் பிரதிஷ்டை செய்யப்பட்டது.
இதில், செயற்பொறியாளா் சுந்தா், கோயில் தக்காா் நம்பி, நகை சரிபாா்ப்பு அலுவலா் செந்தில்குமாா், கோயில் கணக்கா் விஸ்வநாதன், ஸ்தபதிகள் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா். ஏற்பாடுகளை திருமூலநாத சுவாமி பக்தா் பேரவையினா் செய்திருந்தனா்.