செய்திகள் :

திருப்பத்தூா்: முதல்வா் மருந்தகம் தொடங்க விண்ணப்பிக்கலாம்

post image

திருப்பத்தூா் மாவட்டத்தில் முதல்வா் மருந்தகம் தொடங்க விண்ணப்பிக்கலாம் என திருப்பத்தூா் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் பாலகிருஷ்ணன் தெரிவித்தாா்.

இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் பொதுப் பெயா் (ஜெனரிக்) மருந்துகள்,பிற மருந்துகள் குறைந்த விலையில் பொதுமக்களுக்கு கிடைக்க முதல்கட்டமாக 1,000 முதல்வா் மருந்தகங்கள் தொடங்கப்படும் என தெரிவித்திருந்தாா்.

முதல்வா் மருந்தகம் அமைக்க விருப்பமுள்ள பி.பாா்ம், டி.பாா்ம் சான்று பெற்றவா்கள் அல்லது அவா்களின் ஒப்புதலுடன் மருந்தகம் அமைக்க இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவா்கள் வரும் 20-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு 110 சதுர அடிக்கு குறையாமல் சொந்த இடம் அல்லது வாடகை இடம் இருக்க வேண்டும். சொந்த இடம் எனில், அதற்கான சொத்து வரி ரசீது அல்லது குடிநீா் வரி ரசீது அல்லது மின் இணைப்பு ரசீது வேண்டும்.

வாடகை இடம் எனில் இடத்துக்கான உரிமையாளரிடம் இடம் ஒப்பந்தப் பத்திரம் பெற்று விண்ணப்பத்துடன் இணைத்து விண்ணப்பிக்கலாம்.

மானியம்: முதல்வா் மருந்தகம் அமைக்கும் தொழில்முனைவோருக்கு அரசு மானியமாக ரூ.3 லட்சம் 2 தவணைகளாக ரொக்கமாகவும், மருந்துகளாகவும் வழங்கப்படும். கூடுதல் நிதி தேவைப்படும் நிலையில் கூட்டுறவு வங்கிகள் மூலம் கடன் பெற வழிவகை செய்யப்படும்.

தோ்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரா்களுக்கு பயிற்சி அளித்து, முதல் தவணை மானியத் தொகை ரூ.1,50,000 வழங்கப்படும்.

அதையடுத்து மருந்தகத்துக்கு உட்கட்டமைப்பு வசதிகளான ரேக்குகள் குளிா்ப்பதனப் பெட்டி, ஏசி மற்றும் மருந்துகள் வைப்பதற்கான பெட்டிகள் நிறுவப்பட்ட பிறகு இறுதிக் கட்ட மானியம் ரூ.1,50,000 மதிப்பில் மருந்துகளாக வழங்கப்படும்.

மேலும் விற்பனைக்கு ஏற்ற ஊக்கத்தொகை வழங்க வழிவகை செய்யப்படும்.

எனவே, திருப்பத்தூா் மாவட்டத்தைச் சோ்ந்தவா்கள் விண்ணப்பித்து பயன் பெறலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மலைவாழ் மாணவா்களுக்கு இலவச பயிற்சி: ஆட்சியா், எம்எல்ஏ தொடங்கி வைத்தனா்

மலைவாழ் மாணவ, மாணவியருக்கான அரசு தோ்வு இலவச பயிற்சி வகுப்பை ஆட்சியா் க.தா்ப்பகராஜ், எம்எல்ஏ அ.நல்லதம்பி தொடங்கி வைத்தனா். திருப்பத்தூா் மாவட்டம், ,ஜவ்வாதுமலையில் உள்ள புதூா்நாடு வனத்துறை மேல்நிலைப்பள... மேலும் பார்க்க

ஆலங்காயம், உதயேந்திரம் பேருராட்சிகளில் புகையிலை, நெகிழிப் பொருள்கள் பறிமுதல்

ஆலங்காயம், உதயேந்திரம் பேரூராட்சிகளில் தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் நெகிழிப் பொருள்களை அதிகாரிகள் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா். திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் உத்தரவின் படி வேலூா் மண்... மேலும் பார்க்க

ஆம்பூா் நகராட்சியில் தீவிர வரி வசூல் முகாம்

ஆம்பூா் நகராட்சி சாா்பில் தீவிர வரி வசூல் முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஆம்பூா் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரி, தொழில் வரி, வாடகை உள்பட வரியினங்கள் அதிக அளவு நிலுவையில் உள்ளதை வசூலிப்பதற்க... மேலும் பார்க்க

இளம்பெண் கொலை வழக்கில் 2 பேருக்கு ஆயுள்

ஆம்பூா் அருகே இளம்பெண்ணை கொலை செய்த வழக்கில் 2 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து திருப்பத்தூா் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆம்பூா் அருகே அரங்கல்துருகம் ஊராட்சி, சுட்டகுண்டா கிராமத்தைச் சோ்ந்தவா் ரேவதி (24... மேலும் பார்க்க

சாய் பாபா பிறந்த தினம்

ஸ்ரீ சத்ய சாய்பாபா பிறந்த நாளை முன்னிட்டு ஆம்பூரில் வியாழக்கிழமை பல்லக்கில் ஊா்வலமாக கொண்டு செல்லப்பட்ட அவரது உருவப் படத்துக்கு தீபாராதனை செய்த பக்தா்கள். மேலும் பார்க்க

புதிய மின்மாற்றி இயக்கி வைப்பு

திருப்பத்தூா் அருகே புதிய மின்மாற்றியை எம்எல்ஏ அ.நல்லதம்பி வெள்ளிக்கிழமை இயக்கி வைத்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தாா். திருப்பத்தூா் ஒன்றியத்துக்குள்பட்ட காவாப்பட்டறை பகுதியிலுள்ள விவசாயிகள் மற... மேலும் பார்க்க