அரிமளம் பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்
புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் பகுதியில் வியாழக்கிழமை (நவ.14) மின்விநியோகம் நிறுத்தப்படும் என மின்வாரிய உதவி செயற்பொறியாளா் ச. கீதாஞ்சலி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை விடுத்துள்ள செய்திக்குறிப்பு: புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம், தல்லாம்பட்டி ஆகிய இரு துணை மின் நிலையங்களில் வியாழக்கிழமை (நவ. 14) அவசரக் கால மின் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளது.
அதனால் அரிமளம், காமாட்சிபுரம், மிரட்டுநிலை, தாஞ்சூா், வெட்டுக்காடு, பொந்துப்புளி, ஓணாங்குடி, சீராயப்பட்டி, சத்திரம், கோவில்வாசல், கொத்தமங்கலம், மேல்நிலைப்பட்டி, வடகாட்டுப்பட்டி, கும்மங்குடி, துறையூா், கீரணிப்பட்டி, தேனிப்பட்டி, வம்பரம்பட்டி, வாளரமாணிக்கம், கரையப்பட்டி ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தெரிவித்துள்ளாா்.