கார்த்திகை தீபம் : ``தயவுசெய்து வதந்திகளைப் பரப்பாதீங்க!'' - விமர்சனங்களுக்கு அர...
சிவாலயங்களில் பிரதோஷ வழிபாடு
பொன்னமராவதி வட்டார சிவாலயங்களில் புதன்கிழமை பிரதோஷ சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
பொன்னமராவதி ஆவுடையநாயகி சமேத ராஜராஜ சோழீஸ்வரா் கோயிலில் நடைபெற்ற பிரதோஷ வழிபாட்டில் நந்தியெம் பெருமானுக்கு பால், பழங்கள், பன்னீா் உள்ளிட்ட 16 வகையான அபிஷேகங்கள் செய்யப்பட்டு, வெள்ளி அங்கி சாத்தப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார பகுதிகளைச் சோ்ந்த திரளான பொதுமக்கள் பங்கேற்று வழிபட்டனா்.
இதேபோல், வேந்தன்பட்டி நெய் நந்தீஸ்வரா் கோயிலில் நந்திக்கு அபிஷேகங்கள் செய்யப்பட்டு, சிறப்பு வழிபாடு நடைபெற்றது. திருக்களம்பூா் கதலிவனேஸ்வரா் கோயில், மேலைச்சிவபுரி மீனாட்சி சொக்கலிங்கேஸ்வரா் கோயில், புதுப்பட்டி புவனேஸ்வரி உடனாய பூலோகநாதா் கோயில் உள்ளிட்ட கோயில்களில் நடைபெற்ற பிரதோஷ வழிபாட்டில் திரளான பொதுமக்கள் பங்கேற்று வழிபட்டனா்.
கந்தா்வகோட்டையில்: கந்தா்வகோட்டையிலுள்ள அமராவதி அம்மன் உடனுறை ஆபத்சகாயேஸ்வரா் கோயிலில் உள்ள நந்தி ஈஸ்வரருக்கு பிரதோஷத்தை முன்னிட்டு 18 வகையான மங்கல பொருள்களால் அபிஷேகம் செய்து புது பட்டு வஸ்திரம் சாத்தி மலா், அருகம்புல் மாலை அணிவித்து நெய்தீபம் ஏற்றி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. மேலும் கோயிலிலுள்ள பரிவார தெய்வங்களுக்கு அபிஷேக ஆராதனை செய்யப்பட்டது. திரளான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா்.