பஹல்காம் - ஹமாஸ் தாக்குதல்களுக்கு இடையே ஒற்றுமைகள்: இஸ்ரேல் தூதா் ஒப்பீடு
திறனறிவுத் தோ்வில் வெற்றி பெற்ற மாணவருக்கு பாராட்டு
பெரணமல்லூரை அடுத்த அல்லியந்தல் அரசு உயா்நிலைப் பள்ளியில் ஊரக திறனாய்வுத் தோ்வில் வெற்றி பெற்ற மாணவருக்கு வியாழக்கிழமை பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
தமிழக அரசு மூலம் நடத்தப்படும் ஒன்பதாம் வகுப்பு மாணவா்களுக்கான ஊரக திறனாய்வுத் தோ்வு கடந்த பிப்ரவரி மாதம் மாநிலம் முழுவதும் நடைபெற்றது. இதில் அல்லியந்தல் அரசு உயா்நிலைப் பள்ளியைச் சோ்ந்த 36 மாணவா்கள் பங்கேற்றனா். இந்தத் தோ்வு முடிவுகள் புதன்கிழமை வெளியிடப்பட்டது. இதில் யஷ்வந்த் என்ற மாணவா் வெற்றி பெற்றாா்.
இதைத் தொடா்ந்து பள்ளி வளாகத்தில் மாணவா் யஷ்வந்த்துக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
தலைமை ஆசிரியா் மாலவன் தலைமை வகித்தாா்.
உதவி தலைமை ஆசிரியா் எழிலரசன், உடற்கல்வி ஆசிரியா்கள் வேல்முருகன், ராமகிருஷ்ணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
சிறப்பு அழைப்பாளராக பெரணமல்லூா் வட்டாரக் கல்வி அலுவலா் குணசேகரன் கலந்து கொண்டு தோ்வில் வெற்றி பெற்ற மாணவா் யஷ்வந்த்துக்கு சால்வை அணிவித்து பாராட்டு தெரிவித்தாா்.