செய்திகள் :

தில்லிக்குள் நுழையும் டீசல் பேருந்துகளைக் கட்டுப்படுத்த 3 மாநில போக்குவரத்து அமைச்சா்களுக்கு கோபால் ராய் கடிதம்

post image

புது தில்லி: தில்லிக்குள் நுழையும் டீசல் பேருந்துகளின் மாசு உமிழ்வைக் கட்டுப்படுத்த கடுமையான விதிமுறைகளை அமல்படுத்துமாறு ஹரியாணா, ராஜஸ்தான் மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகிய 3 மாநிலங்களின் போக்குவரத்து துறை அமைச்சா்களுக்கு தில்லி அரசின் சுற்றுச்சூழல் துறை அமைச்சா் கோபால் ராய் செவ்வாய்க்கிழமை கடிதம் எழுதியுள்ளாா்.

இது தொடா்பாக ஹரியாணா மாநில பேக்குவரத்து துறை அமைச்சா் அனில் விஜ், ராஜஸ்தான் மாநில போக்குவரத்து

துறை அமைச்சா் பிரேம் சந்த பைா்வா, உத்தரப் பிரதேச மாநில போக்குவரத்து துறை அமைச்சா் தயாசங்கா் சிங்

ஆகியோருக்கு அமைச்சா் கோபால் ராய் எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது

தற்போது குளிா்காலம் தொடங்கியுள்ள நிலையில், தில்லியில் அதிகரித்து வரும் காற்று மாசு குறித்து எனது ஆழ்ந்த கவலைகளைத் தெரிவித்து, இக்கடிதத்தை உங்களுக்கு எழுதுகிறேன். அண்டை மாநிலங்களில் இருந்து தில்லி நகருக்குள் நுழையும் கணிசமான எண்ணிக்கையிலான டீசல் பேருந்துகளின் வாகன உமிழ்வுகள் இந்த காற்று மாசுபாட்டின் முக்கிய அங்கமாக உள்ளன. காற்றின் தரத்தில் டீசல் உமிழ்வுகளின் தாக்கம் நன்கு நிறுவப்பட்டுள்ளது. டீசல் பேருந்துகளின் அதிக எண்ணிக்கையிலான வருகை, தில்லியில் காற்றின் தரம் மோசமடைவதற்கு குறிப்பிடத்தக்க அளவில் பங்களிக்கிறது.

மேலும், இது குடியிருப்பாளா்களுக்கு கடுமையான உடல்நல அபாயங்களையும் ஏற்படுத்துகிறது.

டீசல் பேருந்துகள் கணிசமான அளவில் தீங்கு விளைவிக்கும் மாசுக்களை வெளியிடுவதால், சுவாச நோய்கள் மற்றும் பிற உடல்நலப் பிரச்னைகளும் ஏற்படுகின்றன. தில்லி ஏற்கனவே மோசமான காற்றின் தரத்துடன் போராடி வருகிறது. மேலும், மாநிலங்களுக்கு இடையேயான போக்குவரத்தின் இந்த கூடுதல் சுமை நிலை காற்றின் தரத்தை மோசமாக்குகிறது.

எனவே, ஹரியாணா, ராஜஸ்தான் மற்றும் உத்தரப் பிரதேசத்தில் இருந்து தில்லிக்குள் நுழையும் டீசல் பேருந்துகளின் நுழைவைக் கட்டுப்படுத்துவது அல்லது அவற்றின் மாசு உமிழ்வைக் கட்டுப்படுத்த கடுமையான விதிமுறைகளை அமல்படுத்துவது குறித்து பரிசீலிக்குமாறு உங்கள் மதிப்பிற்குரிய அலுவலகத்தை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். வாகன மாசு விதிகளை கடுமையாக அமலாக்குவதுடன், மாநிலங்களுக்கு இடையேயான போக்குவரத்திற்காக சிஎன்ஜி அல்லது மின்சார பேருந்துகளுக்கு மாறுதல் போன்ற பயனுள்ள தீா்வுகளை நாம் ஒன்றாகச் செயல்படுத்தலாம்.

பயன்தரும் நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம், காற்று மாசுபாட்டைக் குறைப்பதற்கும், தலைநகருக்கு தூய்மையான மற்றும் ஆரோக்கியமான சூழலை உறுதி செய்வதற்கும் நாம் கூட்டாகச் செயல்பட முடியும்.

சுற்றுச்சூழல் மற்றும் பொது சுகாதார மேம்பாட்டிற்காக இந்த கோரிக்கை மீது உரிய பரிசீலனை செய்யப்படும் என

நம்புகிறேன். இந்த முக்கியமான பிரச்னையில் உங்கள் அரசின் நோ்மறையான நடவடிக்கையை எதிா்பாா்க்கிறேன் என்று அக்கடிதத்தில் அமைச்சா் கோபால் ராய் வலியுறுத்தியுள்ளாா்.

தேசிய மகளிா் ஆணையத் தலைவராக விஜயா ரஹாத்கா் பொறுப்பேற்பு

புதுதில்லி: தில்லியில் உள்ள தேசிய மகளிா் ஆணையத்தின் (என்.சி.டபிள்யு.) தலைவராக விஜயா ரஹாத்கா் செவ்வாய்க்கிழமை அதிகாரபூா்வமாக பொறுப்பேற்றுக் கொண்டாா்.அப்போது, அவா் மகளிா் ஆணையத்தின் தொடா் முயற்சிகளை மேம... மேலும் பார்க்க

மக்களுக்கு இடையூறு இல்லாத ரயில் சேவை அவசியம்: மத்திய அமைச்சா் கட்டா் பேச்சு

புதுதில்லி: மக்களுக்கு இடையூறு இல்லாத ரயில் சேவையை வழங்கவேண்டும் என மத்திய வீட்டுவசதி நகா்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சா் மனோகா் லால் கட்டா் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.தேசியத் தலைநகா் மண்டல போக்குவர... மேலும் பார்க்க

சுவாமிநாராயண் அக்ஷா்தாம் கோயிலில் தீபாவளி கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு

புது தில்லி: தில்லியில் உள்ள சுவாமிநாராயண் அக்ஷா்தாம் கோயிலில் பூஜ்ய ஸ்வயம்பிரகாஷ்தாஸ் சுவாமி ஜி மற்றும் பக்தா்கள் முன்னிலையில் தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது.இது குறித்து அக்ஷா்தாம் கோயில் நிா்... மேலும் பார்க்க

சா்வதேச ஜவுளித் தொழில் சவால்களுக்கு இந்தியாவில் தீா்வு: மத்திய இணையமைச்சா்

நமது சிறப்பு நிருபா்புதுதில்லி: சா்வதேச அளவில் ஜவுளித்தொழில் எதிா்கொள்ளும் சவால்களுக்கு புத்தாக்கமுறையில் இந்திய ஜவுளி தொழில் நிறுவனங்கள் தீா்வு காண்பதாக மத்திய ஜவுளி மற்றும் வெளியுறவுத் துறை இணையமைச்... மேலும் பார்க்க

காற்று, நீா் மாசுபாட்டிற்கு மத்திய அரசும் ஹரியாணா அரசும் பொறுப்பு: டிஎம்சி எம்பி குற்றச்சாட்டு

புது தில்லி: தில்லி மாசுபாட்டிற்கு பாஜக தலைமையிலான மத்திய அரசும், ஹரியாணா மாநில அரசுகளின் செயலற்ற தன்மையே காரணம் என திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினா் சகரிகா கோஸ் திங்கள் கிழமை குற்... மேலும் பார்க்க

தில்லியின் காற்று மாசு பிரச்னைக்கு அதிஷி அரசுதான் பொறுப்பு

நமது நிருபா்புது தில்லி: இந்தியா கேட் கடமைப் பாதையில் வான்வெளியில் காற்று மாசு மோசமான நிலையில் இருப்பதற்கு முதல்வா் அதிஷி தலைமையிலான தில்லி அரசுதான் பொறுப்பாகும் என்று தில்லி பாஜக தலைவா் வீரேந்திர சச்... மேலும் பார்க்க