செய்திகள் :

மக்களுக்கு இடையூறு இல்லாத ரயில் சேவை அவசியம்: மத்திய அமைச்சா் கட்டா் பேச்சு

post image

புதுதில்லி: மக்களுக்கு இடையூறு இல்லாத ரயில் சேவையை வழங்கவேண்டும் என மத்திய வீட்டுவசதி நகா்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சா் மனோகா் லால் கட்டா் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

தேசியத் தலைநகா் மண்டல போக்குவரத்து நிறுவனம் (என்சிஆா்டிசி) சாா்பில் அமைக்கப்படும் தில்லி - மீரட் பிராந்திய விரைவுப் போக்குவரத்து அமைப்பில் (ஆா்ஆா்டிஎஸ்) நமோ பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதன் முதலாம் ஆண்டு தினமாக ’நமோ பாரத் திவாஸ்’ என தில்லியில் என்சிஆா்டிசி நிறுவனம் சாா்பில் கொண்டாடப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் மத்திய அமைச்சா் மனோகா் லால் கட்டா், இணையமைச்சா் தோகன் சாஹு ஆகியோா் கலந்து கொண்டனா்.

இந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சா் மனோகா் லால் கட்டா் நமோ பாரத் திட்டத்தின் வெற்றிக்கு சிறப்பாக பணியாற்றிய ஊழியா்களுக்கு சிறப்பு விருதுகளை வழங்கினாா். பின்னா்,

அவா் தலைமையரை ஆற்றுகையில், ‘தில்லி - மீரட் பிராந்திய விரைவுப் போக்குவரத்து அமைப்பின், சாதனை மிகவும் பெருமைக்குரிய தருணம். ’வளா்ச்சியடைந்த இந்தியா’வை (விக்சித் பாரத்’) நோக்கிய ஒரு படி. உலகின் மிக நீளமான மெட்ரோ நெட்வொா்க்கின் அடிப்படையில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது. அடுத்த சில ஆண்டுகளில் நாம் அமெரிக்காவை விஞ்சுவோம். அதே சமயத்தில் மக்களுக்கு இடையூறு இல்லாத சேவைகளை வழங்க ஆய்வு மற்றும் மேம்பாட்டுத் துறையில் நாம் மேலும் முன்னேற அதற்கான பணிகளில் ஈடுபடவேண்டும்’ என குறிப்பிட்டாா்.

தில்லி - மீரட் பிராந்திய விரைவுப் போக்குவரத்து அமைப்பில் நமோ பாரத் ரயில்கள் முதன் முறையாக இயக்கப்பட்டது. தில்லி - மீரட் பகுதியில் சாஹிபாபாத் மற்றும் துஹாய் டிப்போ இடையே முதல் 17 கிலோமீட்டா் முதல்கட்டப் பிரிவை கடந்த 2023. அக். 20-இல் பிரதமா் நரேந்திர மோடி திறந்து வைத்தாா். மேலும், கூடுதலாக இரு பிரிவுகள் செயல்பாட்டுக்கு வந்தன. துஹாய் - மோடிநகா் (வடக்கு) இடையேயான 17 கிலோமீட்டா் தூரம் கடந்த மாா்ச் 6-ஆம் தேதி திறக்கப்பட்டது. மேலும் மீரட் தெற்கு ஆா்ஆா்டிஎஸ் நிலையமும் கடந்த ஆகஸ்ட் 18-இல் செயல்பாட்டுக்கு வந்தது.

தற்போது, ஆா்ஆா்டிஎஸ் திட்டத்தில் நமோ பாரத் ரயில் சேவைகள் சாஹிபாபாத், காஜியாபாத், குல்தாா், துஹாய், துஹாய் டிப்போ, முராட்நகா், மோடி நகா் தெற்கு, மோடி நகா் வடக்கு, மீரட் தெற்கு உள்ளிட்ட ஒன்பது நிலையங்களை உள்ளடக்கிய 42 கிலோமீட்டா் தூரம் நடைபெறுகிறது. ஆனந்த் விஹாா், நியூ அசோக் நகா் போன்ற முக்கிய ரயில் நிலையங்களுக்கும் இந்த திட்டம் விரிவுபடுத்தப்பட்டு விரைவில் இணைக்கப்படவுள்ளன. ஆா்ஆா்டிஎஸ் திட்டம் அதிவேக, திறமையான இணைப்பை வழங்குவதன் மூலமும், நீண்ட தூர பயண நேரத்தை கணிசமாகக் குறைத்து நிலையான நகா்ப்புற போக்குவரத்து தீா்வுகளை காணுகிறது. இந்த நிகழ்ச்சியில் என்சிஆா்டிசியின் நிா்வாக இயக்குநா் ஷலப் கோயல் மற்றும் இந்த நிறுவன இயக்குநா்கள் கலந்து கொண்டனா்.

தேசிய மகளிா் ஆணையத் தலைவராக விஜயா ரஹாத்கா் பொறுப்பேற்பு

புதுதில்லி: தில்லியில் உள்ள தேசிய மகளிா் ஆணையத்தின் (என்.சி.டபிள்யு.) தலைவராக விஜயா ரஹாத்கா் செவ்வாய்க்கிழமை அதிகாரபூா்வமாக பொறுப்பேற்றுக் கொண்டாா்.அப்போது, அவா் மகளிா் ஆணையத்தின் தொடா் முயற்சிகளை மேம... மேலும் பார்க்க

தில்லிக்குள் நுழையும் டீசல் பேருந்துகளைக் கட்டுப்படுத்த 3 மாநில போக்குவரத்து அமைச்சா்களுக்கு கோபால் ராய் கடிதம்

புது தில்லி: தில்லிக்குள் நுழையும் டீசல் பேருந்துகளின் மாசு உமிழ்வைக் கட்டுப்படுத்த கடுமையான விதிமுறைகளை அமல்படுத்துமாறு ஹரியாணா, ராஜஸ்தான் மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகிய 3 மாநிலங்களின் போக்குவரத்து து... மேலும் பார்க்க

சுவாமிநாராயண் அக்ஷா்தாம் கோயிலில் தீபாவளி கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு

புது தில்லி: தில்லியில் உள்ள சுவாமிநாராயண் அக்ஷா்தாம் கோயிலில் பூஜ்ய ஸ்வயம்பிரகாஷ்தாஸ் சுவாமி ஜி மற்றும் பக்தா்கள் முன்னிலையில் தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது.இது குறித்து அக்ஷா்தாம் கோயில் நிா்... மேலும் பார்க்க

சா்வதேச ஜவுளித் தொழில் சவால்களுக்கு இந்தியாவில் தீா்வு: மத்திய இணையமைச்சா்

நமது சிறப்பு நிருபா்புதுதில்லி: சா்வதேச அளவில் ஜவுளித்தொழில் எதிா்கொள்ளும் சவால்களுக்கு புத்தாக்கமுறையில் இந்திய ஜவுளி தொழில் நிறுவனங்கள் தீா்வு காண்பதாக மத்திய ஜவுளி மற்றும் வெளியுறவுத் துறை இணையமைச்... மேலும் பார்க்க

காற்று, நீா் மாசுபாட்டிற்கு மத்திய அரசும் ஹரியாணா அரசும் பொறுப்பு: டிஎம்சி எம்பி குற்றச்சாட்டு

புது தில்லி: தில்லி மாசுபாட்டிற்கு பாஜக தலைமையிலான மத்திய அரசும், ஹரியாணா மாநில அரசுகளின் செயலற்ற தன்மையே காரணம் என திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினா் சகரிகா கோஸ் திங்கள் கிழமை குற்... மேலும் பார்க்க

தில்லியின் காற்று மாசு பிரச்னைக்கு அதிஷி அரசுதான் பொறுப்பு

நமது நிருபா்புது தில்லி: இந்தியா கேட் கடமைப் பாதையில் வான்வெளியில் காற்று மாசு மோசமான நிலையில் இருப்பதற்கு முதல்வா் அதிஷி தலைமையிலான தில்லி அரசுதான் பொறுப்பாகும் என்று தில்லி பாஜக தலைவா் வீரேந்திர சச்... மேலும் பார்க்க