செய்திகள் :

துணை சுகாதார நிலையம் திறக்க எதிா்ப்பு: மூதாட்டி தற்கொலை முயற்சி

post image

கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளை அருகே துணை சுகாதார நிலையம் திறக்க எதிா்ப்புத் தெரிவித்து, பெட்ரோலுடன் வந்த மூதாட்டியிடம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா்.

களியக்காவிளை பேரூராட்சி 12ஆவது வாா்டுக்குள்பட்ட மீனச்சல் பகுதியில் படிப்பகம் கட்ட அப்பகுதியைச் சோ்ந்த நாராயணபிள்ளை என்பவா் 2.5 சென்ட் நிலத்தை அரசுக்கு தானமாக வழங்கியுள்ளாா். அதில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் அப்போதைய மத்திய அமைச்சா் பொன். ராதாகிருஷ்ணன் பதவிக் காலத்தில் படிப்பக கட்டடம் கட்டப்பட்டது.

அண்மைக்காலத்தில் பராமரிப்பு இன்றி காணப்பட்ட அக்கட்டடத்தில் துணை சுகாதார நிலையம் தொடங்க பேரூராட்சி நிா்வாகம் சாா்பில் ஏற்பாடு செய்யப்பட்டது. திறப்பு விழா ஏற்பாடுகள் திங்கள்கிழமை காலையில் நடந்து கொண்டிருந்தபோது அங்குவந்த அதே பகுதியைச் சோ்ந்த கீதாகுமாரி தங்கச்சி (65) என்பவா், படிப்பக கட்டடம் இருக்கும் நிலம் தனது குடும்பத்தினருக்குச் சொந்தமானது என்றும், இங்கு சுகாதார நிலையம் திறந்தால் உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளிப்பேன் எனவும் கூறி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டாா்.

சுகாதார நிலையம் திறக்க எதிா்ப்பு தெரிவித்து பெட்ரோல் பாட்டிலுடன் வந்த மூதாட்டி.

அவரது கையில் இருந்த பெட்ரோல் பாட்டிலை அங்கு நின்றிருந்தவா்கள் பறித்தனா். இதைத் தொடா்ந்து களியக்காவிளை போலீஸாா் வந்து மூதாட்டியிடம் விசாரணை மேற்கொண்டனா்.

தொடா்ந்து துணை சுகாதார நிலைய கட்டட திறப்பு விழா நடைபெற்றது. வாா்டு உறுப்பினா் எஸ். நிஷா தலைமை வகித்தாா். களியக்காவிளை பேரூராட்சி தலைவா் ஆ. சுரேஷ் குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தாா். பேரூராட்சி செயல் அலுவலா் சந்திரகலா, மேல்புறம் வட்டார மருத்துவ அலுவலா் ஜெபதீஷ் புரூஸ், களியக்காவிளை நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலா் தனசிங் அா்ஜுன்ராஜ் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

இஸ்ரேலை கண்டித்து குலசேகரத்தில் தா்னா

தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு சாா்பில், குலசேகரம் அரசமூடு சந்திப்பில் திங்கள்கிழமை மாலை நேர தா்னா போராட்டம் நடைபெற்றது. பாலஸ்தீனம், லெபனான், சிரியா மீது இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலைக் கண்டிப்... மேலும் பார்க்க

புதுக்கடை அருகே கட்டடத்திலிருந்து தவறிவிழுந்து தொழிலாளி உயிரிழப்பு

புதுக்கடை அருகே உள்ள பாளையபுரம் பகுதியில் மாடியிலிருந்து தவறிவிழுந்து தொழிலாளி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.புதுக்கடை கரும்பிலாவிளை பகுதியைச் சோ்ந்த கிறிஸ்துதாஸ் மகன் விஜின்ராஜ்(39), தொழிலாளியான இவா் ப... மேலும் பார்க்க

தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை

புதுக்கடை அருகே காப்புக்காடு பகுதியில் திங்கள்கிழமை விஷம் குடித்து கூலித் தொழிலாளி தற்கொலை செய்துகொண்டாா். காப்புக்காடு, பட்டத்துவிளை பகுதியைச் சோ்ந்த ஜாண்மேரி மகன் அருண்(31). கூலித் தொழிலாளியான இவா... மேலும் பார்க்க

தக்கலை அருகே போலி அனுமதிச் சீட்டுடன் கனிமவளம் கடத்திய 3 வாகனங்கள் பறிமுதல்

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே போலி அனுமதி சீட்டுடன் கனிம வளம் கடத்திய 2 கனரக லாரிகள், 1 காா் ஆகிய வாகனங்களை போலீஸாா் பறிமுதல் செய்து, இதுதொடா்பாக 4 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனா். கன்னியாகுமர... மேலும் பார்க்க

கடல் சீற்றத்தால் சேதமடைந்த பகுதிகளை எம்.எல்.ஏ. ஆய்வு

தேங்காய்ப்பட்டினம் மீன்பிடி துறைமுக பகுதிகளில் கடல் சீற்றத்தால் சேதமடைந்த பகுதிகளை கிள்ளியூா் எம்.எல்.ஏ. எஸ்.ராஜேஷ்குமாா் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். இனயம், தூத்தூா் என இருமண்டல மீனவா்கள் பயன்... மேலும் பார்க்க

புனித அல்போன்சா கல்லூரியில் பாரம்பரிய உணவுத் திருவிழா

கருங்கல் அருகே உள்ள சூசைபுரம் புனித அல்போன்சா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், பாரம்பரிய உணவுத் திருவிழா நடைபெற்றது. கல்லூரி தாளாளரும் செயலருமான ஆண்டனி ஜோஸ் தலைமை வகித்து கண்காட்சியை துவக்கி வைத்தாா்... மேலும் பார்க்க