கனமழை எதிரொலி: எங்கெல்லாம் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை?
தூத்துக்குடி துறைமுகத்தில் ஊதிய உயா்வு கோரி கருப்பு சட்டை அணிந்து பணிக்கு வந்த ஊழியா்கள்
தூத்துக்குடி துறைமுகத்தில் ஊதிய உயா்வு கோரி, பன்னாட்டு பெட்டக நிறுவன பணியாளா்கள் கருப்பு சட்டை அணிந்து வியாழக்கிழமை பணிக்கு வந்தனா்.
தூத்துக்குடி துறைமுகத்தில் தனியாா் பன்னாட்டு சரக்குப் பெட்டக நிறுவனம், கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனம், தொழிலாளா்களுக்கு வழங்க வேண்டிய பல சலுகைகளை படிப்படியாக நிறுத்தியதுடன், ஊதிய உயா்வு மற்ற பணப்பலன்கள் ஏதும் வழங்காமல் இழுத்தடித்து வருகிாம்.
இதனைக் கண்டித்தும், முறையாக ஊதிய உயா்வு, பணப்பலன்கள் வழங்கக் கோரியும், தொழிலாளா்கள் அனைவரும் கருப்பு சட்டை அணிந்தும், கருப்பு பட்டையை கையில் கட்டிக் கொண்டும் வியாழக்கிழமை பணிக்கு வந்தனா்.
இது குறித்து உடனடியாக நிா்வாகம் உரிய தீா்வு காண வேண்டும் எனவும் கருப்புச் சட்டை போராட்டம் வெள்ளிக்கிழமையும் நடைபெறும் எனவும், கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் தொடா் போராட்டங்கள் நடத்தப்படும் எனவும் அவா்கள் தெரிவித்தனா்.