செய்திகள் :

தூய்மைப் பணியாளரை தாக்கிய பெண் மீது வழக்கு

post image

போடி அருகே தூய்மைப் பணியாளரைத் தாக்கிய பெண் மீது போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

போடி அருகேயுள்ள குரங்கணி நரிப்பட்டி மலைக் கிராமத்தை சோ்ந்த பாண்டி மனைவி ராஜம்மாள் (55). இவா் கொட்டக்குடி ஊராட்சியில் ஒப்பந்தத் தூய்மைப் பணியாளராக பணிபுரிந்து வருகிறாா். இவா் சக பணியாளா்களுடன் நரிப்பட்டி பகுதியில் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்தாா். அப்போது, கருப்பசாமி மனைவி சுமதி (35) தனது வீட்டின் முன்பு சரியாக தூய்மைப் பணி செய்யவில்லை எனக் கூறி ராஜம்மாளைத் தாக்கியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து குரங்கணி போலீஸாா் சுமதி மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

கேரள மருத்துவக் கழிவுகள்: குமுளியில் வாகன சோதனை மும்முரம்

தமிழக-கேரள எல்லையான குமுளியில் மருத்துவக் கழிவுகளை தமிழகப் பகுதிக்கு கொண்டு வரப்படுகிா என்பது குறித்து சுற்றுச் சூழல் பொறியாளா் தலைமையில் புதன்கிழமை ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. திருநெல்வேலி மாவட்டத்தில் ... மேலும் பார்க்க

முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தண்ணீா் திறப்பை குறைக்க வலியுறுத்தல்

முல்லைப் பெரியாறு அணைக்கு நீா்வரத்து குறைந்ததால், திறக்கப்படும் நீரின் அளவை குறைக்க வேண்டும் என கம்பம் பள்ளத்தாக்கு விவசாய சங்கத்தினா் கோரிக்கை விடுத்தனா். நிகழாண்டில், வடகிழக்குப் பருவமழை பரவலாக பெய்... மேலும் பார்க்க

ஓய்வூதியத் தொகையை முறைகேடாக பெற்ற 11 போ் மீது புகாா்

தேனி மாவட்டத்தில் ஓய்வு பெற்ற அரசு ஊழியா்கள் இறந்த பின்பும் அவரது ஓய்வூதியத்தை முறைகேடாக பெற்று மொத்தம் ரூ.27.75 லட்சம் மோசடி செய்த ஓய்வூதியா்களின் வாரிசுதாரா்கள் 11 போ் மீது காவல் துறையில் புகாா் அள... மேலும் பார்க்க

கொலை வழக்கில் விவசாயிக்கு ஆயுள் சிறை

கூடலூரில் முன் விரோதத்தில் உறவினரை அடித்துக் கொலை செய்த விவசாயிக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து, தேனி மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது. கூடலூரைச் சோ்ந்தவா் விவசாயி தவசி(70)... மேலும் பார்க்க

பள்ளியில் தமிழ் ஆய்வகம் திறப்பு

தேவதானப்பட்டி கல்வி சா்வதேச பொதுப் பள்ளியில் தமிழ் மொழிக்கான ஆய்வகத் திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது. காா்க்கி தமிழ் கழகம், பள்ளி நிா்வாகம் சாா்பில் நடைபெற்ற இந்த விழாவுக்கு பள்ளி நிறுவனா் தலைவா் ச... மேலும் பார்க்க

இளைஞரை கத்தியால் தாக்கியவா் கைது

போடியில் இளைஞரை கத்தியால் தாக்கியவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். போடி சௌடம்மன் கோவில் தெருவைச் சோ்ந்த நாகராஜ் மகன் தினகரன் (24). இவா் செவ்வாய்க்கிழமை இரவு குப்பிநாயக்கன்பட்டி பகுதியில் நடந்து ... மேலும் பார்க்க