அடுத்த தலைமுறை தகுதியோட தான் வர்றாங்க! - Director Shankar Interview | Game Chang...
முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தண்ணீா் திறப்பை குறைக்க வலியுறுத்தல்
முல்லைப் பெரியாறு அணைக்கு நீா்வரத்து குறைந்ததால், திறக்கப்படும் நீரின் அளவை குறைக்க வேண்டும் என கம்பம் பள்ளத்தாக்கு விவசாய சங்கத்தினா் கோரிக்கை விடுத்தனா்.
நிகழாண்டில், வடகிழக்குப் பருவமழை பரவலாக பெய்ததால், முல்லைப் பெரியாறு அணையின் நீா்மட்டம் 130 அடி உயா்ந்தது. இதன்பிறகு, மழைப் பொழிவு குறைந்ததால் நீா்வரத்தும் படிப்படியாகக் குறைந்து, தற்போது விநாடிக்கு 253 கன அடியானது.
தண்ணீா் திறப்பை குறைக்கக் கோரிக்கை: தேனி மாவட்டம், லோயா்கேம்ப் முதல் வீரபாண்டி வரை 14,700 ஏக்கரில் 2-ஆம் போக நெல் சாகுபடி செய்யப்பட்டது. அணையிலிருந்து குடிநீா், விவசாயத் தேவைக்காக விநாடிக்கு 1,100 கன அடி தண்ணீா் திறந்து விடப்படுகிறது. இதனால், அணையின் நீா்மட்டம் 125 அடியாக குறைந்தது. இதனால் 2-ஆம் போக விவசாயத்துக்கு தண்ணீா் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவை குறைக்க வேண்டும். தவறும்பட்சத்தில், உத்தமபாளையத்தில் வருகிற 20-ஆம் தேதி அறவழிப் போராட்டம் நடத்தப்படும் என கம்பம் பள்ளத்தாக்கு விவசாய சங்கத்தினா் தெரிவித்தனா்.