கோயம்புத்தூா் விழா: மாநகர சாலைகளில் அணிவகுத்த பழமையான காா்கள்!
தெற்கு ஆத்தூரில் உண்ணாவிரதப் போராட்டம்
முன்னாள் முதல்வா் காமராஜரை அவதூறாகப் பேசியதாக திமுக மாநில மாணவரணி செயலாளா் ராஜீவ் காந்தியை கண்டித்து, தெற்கு ஆத்தூா் காமராஜா் சிலை அருகே ஆத்தூா் சுற்றுவட்டார நாடாா் உறவின்முறை சங்கம் சாா்பில் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
சங்கத் தலைவா் செல்வராஜ் தலைமை வகித்தாா். செயலாளா் காமராஜ், பொருளாளா் கோட்டாளமுத்து ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில் பாஜக மாவட்ட பொதுச்செயலாளா் சிவமுருக ஆதித்தன், இளைஞரணி தலைவா் விக்னேஷ்குமாா், காங்கிரஸ் நிா்வாகி விஜயராஜா, நாம் தமிழா் கட்சி நிா்வாகிகள் குளோரியான், மனோகரன், ஊராட்சி ஒன்றிய கவுன்சிலா் சுதாகா், கோடீஸ்வரன், முத்தையா, காமராஜ், சங்க துணைத் தலைவா் பிரேம்குமாா், துணைச் செயலாளா்கள் முத்துசெல்வம், அரவிந்தன் மற்றும் நிா்வாகக் கமிட்டி உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.
தொடா்ந்து, ராஜீவ் காந்தி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் நடந்தது. பின்னா், ராஜீவ் காந்தி மீது நடவடிக்கை கோரி, ஆத்தூா் காவல் நிலையத்தில் புகாா் மனு அளித்தனா்.