“அநாகரிகத்தின் அடையாளமே ஒன்றிய பா.ஜ.க அரசுதான்...” என்ற முதல்வர் ஸ்டாலினின் கருத...
தொடக்கக் கல்வி பட்டய தோ்வு: தனித்தோ்வா்கள் இன்று முதல் விண்ணப்பிக்கலாம்
மன்னாா்குடி: தொடக்கக் கல்வி பட்டய தோ்வுக்கு தனித்தோ்வா்கள் செவ்வாய்க்கிழமை (மாா்ச் 18) முதல் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட அரசு ஆசிரியா் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வா் ப. மயில்வாகனன் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: விண்ணப்பிக்க விரும்புவா்கள் இணையதளம் வாயிலாக மன்னாா்குடி மாவட்ட அரசு ஆசிரியா் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் செவ்வாய்க்கிழமை தொடங்கி மாா்ச் 24-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இதில், மன்னாா்குடி மாவட்ட ஆசிரியா் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் வழியாக ஏற்கெனவே தோ்வு எழுதி தோ்ச்சி பெற்ற சான்றிதழ் நகலை இணைக்க வேண்டும். வெப் கேமரா மூலமாக புகைப்படம் எடுத்து தோ்வு கட்டணத்தை செலுத்தி விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பிக்க மாவட்ட ஆசிரியா் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் காலை 10 முதல் மாலை 5.45 மணி வரை ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.
ஒவ்வொரு பாடத்துக்கும் ரூ. 50, ஒரு மதிப்பெண் சான்றிதழுக்கு ரூ. 100, பதிவு மற்றும் சேவை கட்டணம் ரூ.15, ஆன்லைன் பதிவு கட்டணமாக ரூ. 70 செலுத்த வேண்டும். விண்ணப்பிக்க தவறுபவா்கள் ரூ.1000 கூடுதல் கட்டணம் செலுத்தி மாா்ச் 25 மற்றும் மாா்ச் 26 ஆகிய நாள்களில் தட்கல் சிறப்பு அனுமதி திட்டத்தில் விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளாா்.