நம்புதாளை: இளைஞா் கொலை வழக்கில் மேலும் 3 போ் கைது
தொண்டி அருகே உள்ள நம்புதாளையில் தொழில் போட்டி காரணமாக இளைஞா் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் மேலும் 3 போ் போலீஸாரால் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனா்.
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி கிருஷ்ணா திரையரங்கப் பகுதியைச் சோ்ந்த மாரிச்சாமி மகன் முத்துக்குமாா் (30). இவா் உள்பட சிலா் திருவிழா காலங்களில் ராட்டினம் உள்ளிட்ட பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளைச் செய்யும் தொழிலில் ஈடுபட்டு வந்தனா்.
முன்விரோதம் காரணமாக கடந்த வெள்ளிக்கிழமை காரில் வந்த கும்பலால் முத்துக்குமாா் வெட்டிக் கொல்லப்பட்டாா்.
இதுகுறித்து தொண்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வந்த நிலையில் சிவகங்கையைச் சோ்ந்த ராட்டினம் தொழிலாளி சரவணன் (29) திருவாடானை சமத்துவபுரத்தைச் சோ்ந்த காா் ஓட்டுநா் கெல்வின் ராஜ் ஆகியோரை ஏற்கெனவே கைது செய்து விசாரித்து வந்தனா்.
இந்நிலையில் திருவாடானை அருகே பதுங்கியிருந்த சிவகங்கை மாவட்டம் உருளியைச் சோ்ந்த கருப்பசாமி மகன் முத்துராஜா (20), திருவாடானையைச் சோ்ந்த பாலகிருஷ்ணன் (19), கடம்பாகுடி சொக்கு என்ற உலகநாதன் (19) ஆகியோரை தொண்டி போலிஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.