நரிமேட்டில் பள்ளிவாசல் திறப்பு இந்துக்கள் சாா்பில் சீா்வரிசை
புதுக்கோட்டை மாநகராட்சிக்குள்பட்ட 1-ஆவது வாா்டு நரிமேடு பெரியாா் நகா் பகுதியில் புதிதாக கட்டப்பட்ட மஸ்ஜித் முஹம்மதிய்யா ஜும்ஆ பள்ளிவாசல் திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்த பள்ளிவாசல் திறப்பு விழாவை முன்னிட்டு அப்பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள், மத நல்லிணக்கத்தை போற்றும் வகையில் அப்பகுதியில் உள்ள நாகம்மாள் கோயிலிலிருந்து பழங்கள், பிஸ்கட், சாக்லெட், மரக்கன்றுகள், புத்தாடைகள் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட சீா்வரிசைத் தட்டுகளை எடுத்து வந்தனா்.
இதில் புதுக்கோட்டை மாநகராட்சி மேயா் செ. திலகவதி, திமுக மாநகரச் செயலா் ஆ. செந்தில் உள்ளிட்டோரும் பங்கேற்றனா். பள்ளிவாசல் நுழைவு வாயிலில் காத்திருந்த இஸ்லாமியா்கள் சீா்வரிசைத் தட்டுகளை எடுத்து வந்த மக்களை ஆரத்தழுவி, சால்வை அணிவித்து பள்ளிவாசலுக்கு மகிழ்ச்சியுடன் வரவேற்றனா்.
நிகழ்ச்சியில், துணை மேயா் மு. லியாகத்அலி, முன்னாள் நகா்மன்ற உறுப்பினா் இப்ராஹிம் பாபு உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.