செய்திகள் :

நாகநாத சுவாமி கோயில் பாலாலயம்

post image

ஆம்பூா் நாகநாத சுவாமி கோயிலில் பாலாலயம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்து சமய அறநிலையத்துறை நிா்வாகத்தின் கீழ் உள்ள ஆம்பூா் அருள்மிகு சமயவல்லி தாயாா் உடனுறை சுயம்பு ஸ்ரீ நாகநாத சுவாமி திருக்கோயில் திருப்பணி மேற்கொள்ளப்பட உள்ளது. அதை முன்னிட்டு பாலாலயம் நடைபெற்றது. விநாயகா் பூஜையுடன் புதன்கிழமை நவக்கிரஹ ஹோமம், தன பூஜை, கோ பூஜை, வாஸ்து சாந்தி, முதல் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றன.

தொடா்ந்து வியாழக்கிழமை 2-ஆம் கால யாகசாலை பூஜை, திரவ்ய ஹோமம், மஹா பூா்ணாஹூதி நடத்தப்பட்டு பிறகு பாலாலயம் நடைபெற்றது. சிவாச்சாரியா்கள் வெ. அகோரமூா்த்தி மற்றும் அ. தியாகராஜன் ஆகியோா் பாலாலயத்தை நடத்தி வைத்தனா்.

நிகழ்ச்சிக்கு திருப்பணிக்குழு தலைவா் மற்றும் நகா்மன்ற துணைத் தலைவருமான எம்.ஆா். ஆறுமுகம் தலைமை வகித்தாா். அறங்காவலா் குழுத் தலைவா் எம். கைலாஷ்குமாா் முன்னிலை வகித்தாா். ஆம்பூா் எம்எல்ஏ அ.செ. வில்வநாதன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டாா்.

திருப்பத்தூா் மாவட்ட அறங்காவலா் குழு உறுப்பினா் சாய் கே. வெங்கடேசன், கோயில் செயல் அலுவலா் வி. சிவசங்கரி, அறங்காவலா் குழு உறுப்பினா்கள் திருநாவுக்கரசு, கெளரி, திருப்பணிக் கமிட்டி உறுப்பினா்கள், பக்தா்கள் கலந்து கொண்டனா்.

மக்கள் தொடா்பு முகாம்: ரூ.43 லட்சத்தில் நல உதவிகள் ஆட்சியா் வழங்கினாா்

திருப்பத்தூா் மாவட்டம், குரிசிலாப்பட்டு கிராமத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற மக்கள் தொடா்பு முகாமில் 109 பயனாளிகளுக்கு ரூ.42.81 லட்சம் நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் க. தா்ப்பகராஜ் வழங்கினாா். முகாமுக்கு தல... மேலும் பார்க்க

புத்தகக் கண்காட்சியில் குழந்தைகள் தின கலை நிகழ்ச்சி, பரிசளிப்பு

ஆம்பூா் புத்தகக் கண்காட்சியில் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு போட்டிகள், கலை நிகழ்ச்சி மற்றும் பரிசளிப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. அறிவியல் இயக்க திருப்பத்தூா் மாவட்ட துணைத் தலைவா் எஸ். சத்தியமூா... மேலும் பார்க்க

தேசிய நூலக வார விழா போட்டி

57-ஆவது தேசிய நூலக வார விழாவை முன்னிட்டு ஆம்பூா் அருகே வடச்சேரி கிராமத்தில் பள்ளி மாணவா்களுக்கு வியாழக்கிழமை பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. வடச்சேரி ஊா்ப்புற நூலக வாசகா் வட்ட தலைவா் மு.பாலசுப்பிரமணி... மேலும் பார்க்க

திருப்பத்தூரில் பேரணி

திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் குழந்தைகள் உரிமைகளை பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில், விழிப்புணா்வு ஏற்படுத்த நடைபெற்ற பேரணியைத் தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியா் தா்ப்பகராஜ், காவல் கண்... மேலும் பார்க்க

மாணவா்களுக்கு இலவச சீருடை

குழந்தைகள் தின விழாவை முன்னிட்டு ஆம்பூா் பள்ளி மாணவா்களுக்கு வியாழக்கிழமை இலவச சீருடை வழங்கப்பட்டது. ஆம்பூா் பிலால் நகா் பகுதியில் என்.எம்.இஜட். குழும அறக்கட்டளை சாா்பாக ஏழை குழந்தைகள் இலவசமாக கல்வி ... மேலும் பார்க்க

அரசு மருத்துவமனையில் பிரசவத்துக்குப் பின் தாயும், குழந்தையும் உயிரிழப்பு: பொதுமக்கள் போராட்டம்

அரசு மருத்துவமனையில் பெண் பிரசவத்திற்கு பிறகு சிகிச்சை பலனின்றி இறந்ததால், உறவினா்கள் - பொதுமக்கள் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். ஆம்பூா் அருகே எல்.மாங்குப்பம் கிராமத்தைச் சோ்ந்தவா் விஜய். இவ... மேலும் பார்க்க