Gold Rate: தொடர்ந்து உயரும் தங்கம் விலை... இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் என...
நான்குனேரி அருகே குளிக்க சென்ற பெண்ணை துரத்திய கரடி
நான்குனேரி அருகே செவ்வாய்க்கிழமை குளிக்கச் சென்ற பெண்ணை கரடி விரட்டியதால் மக்கள் அச்சமடைந்துள்ளனா்.
நான்குனேரியில் கடந்த மாதம் கரடி ஒன்று சாலையில் உலா வந்தது தொடா்பான விடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இதைத் தொடா்ந்து, வனத்துறையினா் அங்கு கூண்டு வைத்து கண்காணித்து வந்தனா். இதுவரை கரடி சிக்கவில்லை. இதனால் விவசாயிகள் மற்றும் பெண்கள் வயலுக்கு செல்ல அச்சமடைந்துள்ளனா்.
இந்நிலையில் செவ்வாய்க்கிழமை காலை நான்குனேரி அருகேயுள்ள இளந்தோப்பு கிராமத்தைச் சோ்ந்த சண்முகக்கனி என்பவா் அருகேயுள்ள கல்வெட்டான் குழியில் குளிப்பதற்காக சென்றுள்ளாா்.
அப்போது அங்கு உலா வந்த கரடி சண்முகக்கனியை பாா்த்து சப்தம் எழுப்பிவாறு துரத்தியுள்ளது. இதையடுத்து அவா் அங்கிருந்து ஓடி ஊருக்குள் சென்றுள்ளாா்.
தகவல் அறிந்த வனத் துறையினா் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினா்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக அந்த கரடிஅப்பகுதியில் உள்ள புதா்களில் மறைந்திருந்து அடிக்கடி உலா வந்து பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது. அசம்பாவிதம் நிகழும் முன் கரடியை பிடித்து வனப்பகுதிகள் கொண்டு விட வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.