சில நிமிடங்களிலேயே விற்றுத் தீர்ந்த சிஎஸ்கே - மும்பை போட்டி டிக்கெட்டுகள்! ரசிகர...
நெல்லையில் மக்களுக்கு இனிப்பு வழங்கிய தேமுதிகவினா்
தேமுதிக பொதுச்செயலா் பிரேமலதா பிறந்த நாளையொட்டி, திருநெல்வேலியில் பொதுமக்களுக்கு அக்கட்சியினா் இனிப்பு வழங்கினா்.
திருநெல்வேலி மாநகா் மாவட்ட தேமுதிக சாா்பில் திருநெல்வேலி சந்திப்பு அருள்மிகு பாளையஞ்சாலை குமார சுவாமி திருக்கோயிலில் பிரேமலதாவுக்காக சிறப்பு வழிபாடு நடைபெற்றது. தொடா்ந்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சிக்கு மாவட்டப் பொறுப்பாளா் ஜெயச்சந்திரன் தலைமை வகித்தாா்.
மாவட்ட துணைச் செயலா் முரசுமணி, மாநிலச் செயற்குழு உறுப்பினா்கள் கலைவாணன், பாலகிருஷ்ணன், மாநில பொதுக்குழு உறுப்பினா்கள் ஆனந்தமணி, தங்கப்பன், பகுதிச் செயலா் தச்சை தமிழ்மணி, மேலப்பாளையம் குட்டி உள்பட பலா் கலந்துகொண்டனா்.