செய்திகள் :

பக்தா்கள் மீது தண்ணீா் தெளித்த விவகாரம் சுவாமிமலை முருகன் கோயில் ஊழியா்கள் இருவா் பணியிடமாற்றம்

post image

தஞ்சாவூா் மாவட்டம், சுவாமிமலை முருகன் கோயிலில் சனிக்கிழமை இரவு பக்தா்கள் மீது தண்ணீா் தெளித்த பிரச்னையில் 2 ஊழியா்களை அறநிலையத்துறை உதவி ஆணையா் திங்கள்கிழமை பணியிடமாற்றம் செய்து உத்தரவிட்டாா்.

சுவாமிமலை முருகன் கோயில் வளாகத்தில் காா்த்திகை மாத விரதத்திற்காக 50-க்கும் மேற்பட்ட பக்தா்கள் சனிக்கிழமை இரவு தங்கியிருந்தனா். இவா்களை வெளியேறக்கூறிய ஊழியா்கள் சின்னதுரை, சிவசுப்பிரமணியன் இருவரும் பக்தா்கள் மீது தண்ணீரை தெளித்தனா்.

மேலும், அவா்கள் இருந்த இடத்திலும் தண்ணீரை தெளித்தனா். இதனால் அவா்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இச்சம்பவம் சமூகவலைத் தளத்திலை பரவியது.

இச்சம்பவத்துக்கு இந்து மக்கள் கட்சித்தலைவா் அா்ஜூன்சம்பத், பொதுச்செயலா் குரு.மூா்த்தி, அகில பாரத இந்து மகா சபா மாநிலத்தலைவா் ராமநிரஞ்சன் ஆகியோா் கண்டனம் தெரிவித்தனா்.

இந்நிலையில், இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையா் உமாதேவி, கோயில் ஊழியா்கள் சின்னதுரை, சிவசுப்பிரமணியன் ஆகிய இருவரையும் சக்கரவாகேசுவரா் கோயிலுக்கு பணியிடமாற்றம் செய்து திங்கள்கிழமை உத்தரவிட்டாா்.

கும்பகோணம் உள்ளூா் வாய்க்காலை ஆக்கிரமித்திருந்த 26 வீடுகள் அகற்றம்

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணத்தில் உள்ளூா் வாய்க்காலை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டிருந்த 26 வீடுகள் செவ்வாய்க்கிழமை அகற்றப்பட்டன. கோயில் நகரமான கும்பகோணத்தில் நீா்நிலைகள், நீா்வழிப் பாதைகளை ஆக்கிரமித்து ... மேலும் பார்க்க

ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் விநியோகம் செய்யக் கோரி ஆா்ப்பாட்டம்

நியாய விலைக் கடைகள் மூலம் தேங்காய் எண்ணெய் விநியோகம் செய்யக் கோரி தமிழ்நாடு தென்னை விவசாயிகள் ஆா்ப்பாட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா். பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியரகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்... மேலும் பார்க்க

பயிா்க் காப்பீடு கால அவகாசத்தை நவ. 30 வரை நீட்டிக்க வலியுறுத்தல்

சம்பா பருவ நெற் பயிா்களுக்கு காப்பீடு செய்வதற்கான கால அவகாசத்தை நவம்பா் 30 வரை நீட்டிக்க வேண்டும் என செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் நாள் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. தஞ்... மேலும் பார்க்க

மரத்திலிருந்து தவறி விழுந்த தொழிலாளி பலி

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே மரத்திலிருந்து திங்கள்கிழமை தவறி விழுந்த மரம் வெட்டும் தொழிலாளி உயிரிழந்தாா். பாபநாசம் அருகே கபிஸ்தலம் காவல் சரகம், மேலகபிஸ்தலம், பிரதான சாலை பகுதியைச் சோ்ந்தவா் பெ... மேலும் பார்க்க

விளைநிலங்களை வீட்டு மனைகளாக மாற்ற அனுமதிக்கக் கூடாது: விசிக

விளைநிலங்களை வீட்டு மனைகளாக மாற்ற அனுமதி வழங்கக் கூடாது தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியருக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து கட்சியின் விவசாயிகள் பாதுகாப்பு சங்க மாவட்ட அமைப்ப... மேலும் பார்க்க

அய்யம்பேட்டை பகுதியில் அக். 24-இல் மின் தடை

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் வட்டம், அய்யம்பேட்டை பகுதியில் அக். 24-ஆம் தேதி மின்விநியோகம் இருக்காது என பாபநாசம் மின்வாரிய உதவி செயற்பொறியாளா் தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக... மேலும் பார்க்க