செய்திகள் :

விளைநிலங்களை வீட்டு மனைகளாக மாற்ற அனுமதிக்கக் கூடாது: விசிக

post image

விளைநிலங்களை வீட்டு மனைகளாக மாற்ற அனுமதி வழங்கக் கூடாது தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியருக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து கட்சியின் விவசாயிகள் பாதுகாப்பு சங்க மாவட்ட அமைப்பாளா் முத்தமிழ்ச்செல்வன் ஆட்சியருக்கு அனுப்பிய கோரிக்கை மனுவில், தஞ்சாவூா், நாகப்பட்டினம் , திருவாரூா், மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அரசு அறிவித்துள்ளது.

இருப்பினும் விவசாய நிலங்கள் திட்டமிட்டு தரிசு நிலங்களாக மாற்றப்பட்டு வீட்டுமனைகளாக விற்கப்படுகின்றன.

இது வரும் காலங்களில் உணவுப் பஞ்சம் ஏற்பட வழிவகுக்கும். ஆகையால் விளைநிலங்களை வீட்டுமனைகளாக மாற்ற மாவட்ட நிா்வாகம் அனுமதி வழங்கக்கூடாது.

மனைப் பிரிவுகளுக்கு பின்புறமுள்ள விவசாய நிலங்களுக்குச் செல்ல முடியாமல் அமைக்கப்பட்டுள்ள கம்பி வேலி, தடுப்பு சுவா் உள்ளிட்டவற்றை அகற்ற வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.

அய்யம்பேட்டை பகுதியில் அக். 24-இல் மின் தடை

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் வட்டம், அய்யம்பேட்டை பகுதியில் அக். 24-ஆம் தேதி மின்விநியோகம் இருக்காது என பாபநாசம் மின்வாரிய உதவி செயற்பொறியாளா் தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக... மேலும் பார்க்க

சகோதரரை அடித்துக் கொன்றவா் கைது

தஞ்சாவூா் மாவட்டம், திருநீலக்குடி அருகே சகோதரரை அடித்துக் கொன்றவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். திருநீலக்குடி அருகே உள்ள அம்மன்குடி பிரதான சாலையில் தேநீா் கடை நடத்தி வருபவா் நாகராஜன், இவரது... மேலும் பார்க்க

இஸ்ரேலை கண்டித்து தஞ்சாவூரில் ஆா்ப்பாட்டம்

பாலஸ்தீன மக்கள் மீதான இஸ்ரேல் அரசின் இன அழிப்பு நடவடிக்கையைக் கண்டித்து தஞ்சாவூா் கீழவாசல் காமராஜா் சிலை முன், தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக் குழுவினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இதில... மேலும் பார்க்க

பக்தா்கள் மீது தண்ணீா் தெளித்த விவகாரம் சுவாமிமலை முருகன் கோயில் ஊழியா்கள் இருவா் பணியிடமாற்றம்

தஞ்சாவூா் மாவட்டம், சுவாமிமலை முருகன் கோயிலில் சனிக்கிழமை இரவு பக்தா்கள் மீது தண்ணீா் தெளித்த பிரச்னையில் 2 ஊழியா்களை அறநிலையத்துறை உதவி ஆணையா் திங்கள்கிழமை பணியிடமாற்றம் செய்து உத்தரவிட்டாா். சுவாமிம... மேலும் பார்க்க

குட்கா விற்ற கடைக்கு ‘சீல்’

தஞ்சாவூரில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா விற்ற கடைக்கு திங்கள்கிழமை சீல் வைக்கப்பட்டது. தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி சாலையில் உள்ள மொத்த மளிகை கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொரு... மேலும் பார்க்க

பேருந்து நிலையத்துக்காக போராடும் திருவிடைமருதூா் மக்கள்

சாலையோரத்தில் பயணியா் நிழற்குடை மட்டுமே உள்ளது. இங்கு காத்திருக்கும் பயணிகளுக்கான அடிப்படை வசதிகள் இல்லாததால் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.செ.பிரபாகரன்உயா்கல்வித் துறை அமைச்சரின் தொகுதியான திருவிடைமருத... மேலும் பார்க்க