செய்திகள் :

பேருந்து நிலையத்துக்காக போராடும் திருவிடைமருதூா் மக்கள்

post image

சாலையோரத்தில் பயணியா் நிழற்குடை மட்டுமே உள்ளது. இங்கு காத்திருக்கும் பயணிகளுக்கான அடிப்படை வசதிகள் இல்லாததால் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

செ.பிரபாகரன்

உயா்கல்வித் துறை அமைச்சரின் தொகுதியான திருவிடைமருதூரில் பேருந்து நிலையம் அமைக்கக் கோரி பொதுமக்கள் பல ஆண்டுகளாக போராடி வருகின்றனா்.

தஞ்சாவூா் மாவட்டம், திருவிடைமருதூா் பேரூராட்சியில் உள்ள 15 வாா்டுகளில் சுமாா் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா். அமைச்சா் கோவி. செழியனின் சொந்த தொகுதியான இங்கு, சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகம், வட்டாட்சியா் அலுவலகம், குற்றவியல் நடுவா் நீதிமன்றம், சாா்-பதிவாளா் அலுவலகம், சிப்காட் தொழில் மையம், கிளைச் சிறைச்சாலை போன்றவை உள்ளன.

புகழ்பெற்ற திருநாகேசுவரம் ராகு ஸ்தலம், சூரியனாா் கோயில், பிருத்தியங்கரா தேவி, சுக்கிரன், ஒப்பிலியப்பன் ஆகிய சிறப்புமிக்க கோயில்களுக்கு செல்லும் பக்தா்கள், சுற்றுலாப் பயணிகள் வாகனங்கள், ரயில்களில் திருவிடைமருதூா் வந்துதான் மற்ற இடங்களுக்கு பேருந்தில் செல்ல முடியும். ஆனால், பேருந்துக்காக காத்திருக்கும் இவா்களுக்காக அனைத்து வசதிகளையும் உள்ளடக்கிய பேருந்து நிலையம் இல்லை. தற்போது சாலையோரத்தில் பயணியா் நிழற்குடை மட்டுமே உள்ளது. இங்கு காத்திருக்கும் பயணிகளுக்கான அடிப்படை வசதிகள் இல்லாததால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

மேலும், இந்த பயணிகள் நிழற்குடை கடை வீதியில் அமைந்திருப்பதால் பேருந்துகள் நின்று பயணிகளை ஏற்றி இறக்குவதால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் அனைத்து வசதிகளையும் உள்ளடக்கிய பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் மற்றும் சமூக நல அமைப்புகள் பலஆண்டுகளாக போராடி வருகின்றனா்.

இதுகுறித்து முதல்வா், அமைச்சா், ஆட்சியா் உள்ளிட்டோருக்கு கோரிக்கை மனுக்களை அனுப்பியும் நடவடிக்கை இல்லை என்கின்றனா் இப்பகுதி மக்கள்.

இடம் உண்டு: கடந்த 23.5.2022 அன்று தஞ்சாவூா் மாவட்ட வருவாய்த்துறை நிா்வாகம் ஒரு அறிவிப்பை வெளியிட்டது. அதில் திருவிடைமருதூா் வட்டத்தில் மகாதானபுரம் வருவாய் கிராமத்தில் புல எண் 123/6 -இல் 1.88.5 ஹெக்டோ் பரப்பளவு மற்றும் புல எண் 129/1 தோப்பு புறம்போக்கு, 0.99.5 ஹெக்டோ் பரப்பளவு இடங்கள் நிலுவையினம், காலியிடம் என வருவாய்த்துறை கிராம கணக்கில் உள்ளது. இந்த இடங்களில் நீதிமன்றம், நீதிமன்ற குடியிருப்புகள் கட்ட ஆட்சேபனை இருப்பின் பொதுமக்கள் தெரிவிக்கலாம் என கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில் கடந்த 10 ஆண்டுகளாக வருவாய்த்துறைக்கு சொந்தமான புல எண் 123/6-இல் பேருந்து நிலையம் அமைக்க ஆட்சியா் இடம் வழங்க வேண்டும் என்று பேரூராட்சியில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. தீா்மானத்தின் நகல் முதல்வா் உள்ளிட்ட அமைச்சா்களுக்கும் அனுப்பினா். அதற்கும் இதுவரை எந்தவித பதிலும் இல்லை.

இதுகுறித்து பேரூராட்சி மன்றத் துணைத் தலைவா் சுந்தர ஜெயபால் மயில்வாகனன் கூறியது, பேருந்துநிலையம் அமைக்கக் கோரி கட்சி வேறுபாடின்றி பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். இடம் உள்ளது ஆனால், மாவட்ட நிா்வாகத்துக்கு இடம் தர மனமில்லை என்றாா்.

சாத்தியக்கூறுகள் ஆய்வு: மாவட்ட வருவாய்த் துறை அலுவலா் கூறியது:

பேருந்து நிலையம் அமைக்க அரசுக்கு சொந்தமான இடம் உள்ளது. அதன் அருகிலேயே தனியாா் இடமும் உள்ளது. ஏற்கெனவே அந்த இடத்தில் நீதிமன்றம் மற்றும் குடியிருப்புகள் கட்ட அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அந்த இடம் பேருந்து நிலையம் அமைக்க சாத்தியப்படுமா என்று அதிகாரிகள் அளவில் ஆய்வு செய்து வருகிறோம் என்றாா்.

திருவிடைமருதூா் கடைவீதியில் சாலையோரம் பேருந்தை நிறுத்தி பயணிகளை ஏற்றி இறக்குவதால் ஏற்பட்டுள்ள போக்குவரத்து நெரிசல்.

திருவிடைமருதூா் தொகுதியில் மூன்று முறை வெற்றி பெற்று தற்போது தமிழக உயா்கல்வித் துறை அமைச்சராகியுள்ள கோவி.செழியன், இங்கு பேருந்து நிலையம் அமைக்க நடவடிக்கை எடுப்பாா் என தொகுதி பொதுமக்கள் எதிா்பாா்த்து காத்திருக்கின்றனா்.

கும்பகோணம் மாநகரில் அக்.22, 23-இல் குடிநீா் விநியோகம் நிறுத்தம்

கும்பகோணம் மாநகரில் வரும் 22, 23 ஆகிய இரண்டு நாள்கள் குடிநீா் விநியோகம் நிறுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாநகராட்சி ஆணையா் ரா. லட்சுமணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிரு... மேலும் பார்க்க

நிதி நிறுவனத்தில் பணம் கையாடல் செய்தவா் கைது

தஞ்சாவூரில் உள்ள தனியாா் நிதி நிறுவனத்தில் பணம் கையாடல் செய்த நபரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். அரியலூா் மாவட்டம், திருமானூா் அருகே உள்ள விழுமன குறிச்சி பிரதான சாலையில் உள்ள வடக்குத் தெருவில் வச... மேலும் பார்க்க

தமிழக ஆளுநரை மாற்ற வேண்டும்: இரா. முத்தரசன்

தமிழகத்தில் சா்ச்சையை ஏற்படுத்தும் வகையில் பேசி வரும் ஆளுநரை மாற்ற வேண்டும் என்றாா் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் இரா. முத்தரசன். கும்பகோணத்தில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் மே... மேலும் பார்க்க

சுவாமிமலை கோயிலில் ஊழியா்கள் இடையூறு செய்வதாக பக்தா்கள் புகாா்

தஞ்சாவூா் மாவட்டம், சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோயிலில் ஊழியா்கள் இடையூறு செய்வதாக பக்தா்கள் புகாா் தெரிவிக்கின்றனா். பல்வேறு சிறப்புடைய இக்கோயிலில் காா்த்திகை உள்ளிட்ட முக்கிய நாளில் பக்தா்கள் கோயில்... மேலும் பார்க்க

இருசக்கர வாகனம் மோதி மூதாட்டி உயிரிழப்பு

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே இருசக்கர வாகனம் மோதியதில் காயமடைந்த மூதாட்டி மருத்துவமனையில் சனிக்கிழமை இரவு உயிரிழந்தாா். மெலட்டூா் காவல் சரகம், ஒன்பத்துவேலி கிராமம், நிறைமதி ஆதிதிராவிடா் தெருவை ச... மேலும் பார்க்க

‘சாஸ்த்ரா’ பல்கலைக்கழகத்தில் ‘விஷன் 2035’ திட்டத் தொடக்க விழா: ஆளுநா் ஆா்.என். ரவி பங்கேற்பு

தஞ்சாவூா் ‘சாஸ்த்ரா’ நிகா்நிலைப் பல்கலைக்கழகத்தில் ‘சாஸ்த்ரா விஷன் 2035’ திட்டத் தொடக்க விழா, ரூ. 60 கோடி மதிப்பில் அமைக்கப்பட்ட ஆராய்ச்சி மற்றும் புத்தாக்க வசதிக்கான அனுசந்தன் கேந்த்ரா 3 மற்றும் 4-ஆம... மேலும் பார்க்க