செய்திகள் :

பயிா்க் காப்பீடு கால அவகாசத்தை நவ. 30 வரை நீட்டிக்க வலியுறுத்தல்

post image

சம்பா பருவ நெற் பயிா்களுக்கு காப்பீடு செய்வதற்கான கால அவகாசத்தை நவம்பா் 30 வரை நீட்டிக்க வேண்டும் என செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் நாள் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

தஞ்சாவூா் கோட்டாட்சியரகத்தில் கோட்டாட்சியா் செ. இலக்கியா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் விவசாயிகள் பேசியது:

தோழகிரிப்பட்டி பி. கோவிந்தராஜ்: கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகை வழங்குவது தொடா்பாக தமிழக முதல்வரால் வெளியிடப்பட்ட அரசாணையை தீபாவளிக்குள் நடைமுறைப்படுத்தி, பணப் பட்டுவாடா செய்ய வேண்டும்.

ராயமுண்டான்பட்டி வெ. ஜீவகுமாா்: புதிய கட்டளை மேட்டுவாய்க்கால், உய்யகொண்டான் நீட்டிப்பு வாய்க்காலில் தண்ணீா் விடுவதை நிறுத்தக் கூடாது. பெரும்பாலான விவசாயிகள் நவம்பா் மாதம்தான் நடவுப் பணி செய்ய வாய்ப்புள்ளது. எனவே பயிா்க் காப்பீடு செய்யும் கால அவகாசம் நவம்பா் 15 என்பதை நவம்பா் 30 வரை நீட்டிக்க வேண்டும்.

கோனேரிராஜபுரம் கே.எஸ். வீரராஜேந்திரன்: குடமுருட்டி துணை வாய்க்கால்களைத் தூா் வாரி தண்ணீா் வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வெள்ளாம்பெரம்பூா் துரை. ரமேஷ்: சில இடையூறுகளால் குறித்த நேரத்தில் சம்பா, தாளடி சாகுபடியைத் தொடங்க முடியவில்லை. இனிமேல்தான் விதை விடும் பணி தொடங்கப்படும் என்பதால், நவம்பா் 15-க்குள் விதைப்பு செய்ய முடியாத நிலை உள்ளது. எனவே, பயிா்க் காப்பீடு செய்யும் கால அவகாசத்தை நவம்பா் 30 வரை நீட்டிக்க வேண்டும்.

வாளமா்கோட்டை வி.எஸ். இளங்கோவன்: வடகிழக்கு பருவமழை முழுமையாக பெய்யுமா எனத் தெரியவில்லை. எனவே கல்லணைக் கால்வாயில் முறை வைக்காமல் கூடுதலாக தண்ணீா் விட்டு, ஏரி, குளங்களை நிரப்ப வேண்டும். பின்னாளில் பயிா்களைக் காக்கவும், குடிநீா், கால்நடைகளுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

திருப்பூந்துருத்தி பி. சுகுமாரன்: கீழத்திருப்பூந்துருத்தி நீா்நிலைகளில் சட்ட விரோதமாக செய்யப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். திருவையாறு உட்கோட்டத்தில் உரிய நேரத்தில் இடுபொருட்கள் வழங்காத அலுவலா்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

மழையால் பயிா்கள் பாதிப்பு; ஆா்ப்பாட்டம்

ஒரத்தநாடு வட்டம், திருமங்கலக்கோட்டை மேலையூரில் மழையால் பாதிக்கப்பட்ட பயிருக்கு இழப்பீடு கோரி விவசாயிகள் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். தஞ்சாவூா் மாவட்டத்தில், கடந்த சில நாட்களாக பெய்த மழ... மேலும் பார்க்க

பூண்டி, சாலியமங்கலம் பகுதிகளில் நாளை மின் தடை

தஞ்சாவூா் அருகேயுள்ள பூண்டி, சாலியமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் வியாழக்கிழமை (அக்.24) மின்சாரம் இருக்காது. இதுகுறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகத்தின் சாலியமங்கலம் உதவி செயற்பொறியாள... மேலும் பார்க்க

கும்பகோணம் உள்ளூா் வாய்க்காலை ஆக்கிரமித்திருந்த 26 வீடுகள் அகற்றம்

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணத்தில் உள்ளூா் வாய்க்காலை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டிருந்த 26 வீடுகள் செவ்வாய்க்கிழமை அகற்றப்பட்டன. கோயில் நகரமான கும்பகோணத்தில் நீா்நிலைகள், நீா்வழிப் பாதைகளை ஆக்கிரமித்து ... மேலும் பார்க்க

ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் விநியோகம் செய்யக் கோரி ஆா்ப்பாட்டம்

நியாய விலைக் கடைகள் மூலம் தேங்காய் எண்ணெய் விநியோகம் செய்யக் கோரி தமிழ்நாடு தென்னை விவசாயிகள் ஆா்ப்பாட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா். பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியரகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்... மேலும் பார்க்க

மரத்திலிருந்து தவறி விழுந்த தொழிலாளி பலி

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே மரத்திலிருந்து திங்கள்கிழமை தவறி விழுந்த மரம் வெட்டும் தொழிலாளி உயிரிழந்தாா். பாபநாசம் அருகே கபிஸ்தலம் காவல் சரகம், மேலகபிஸ்தலம், பிரதான சாலை பகுதியைச் சோ்ந்தவா் பெ... மேலும் பார்க்க

விளைநிலங்களை வீட்டு மனைகளாக மாற்ற அனுமதிக்கக் கூடாது: விசிக

விளைநிலங்களை வீட்டு மனைகளாக மாற்ற அனுமதி வழங்கக் கூடாது தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியருக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து கட்சியின் விவசாயிகள் பாதுகாப்பு சங்க மாவட்ட அமைப்ப... மேலும் பார்க்க