செய்திகள் :

பங்கு பரஸ்பர நிதித் திட்டங்களில் குறைந்த முதலீட்டு வரத்து

post image

பங்கு பரஸ்பர நிதி திட்டங்களில் முதலீட்டு வரவு கடந்த பிப்ரவரி மாதம் 26 சதவீதம் சரிவைக் கண்டுள்ளது.

இது குறித்து இந்திய பரஸ்பர நிதி நிறுவனங்களின் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த பிப்ரவரி மாதத்தில் பங்கு முதலீட்டு திட்டங்களிலிருந்து திரும்பப் பெறப்பட்ட முதலீட்டைவிட , அந்த வகை திட்டங்களில் கூடுதலாக மேற்கொள்ளப்பட்ட முதலீடு ரூ.26,303 கோடியாக உள்ளது.முந்தைய ஜனவரி மாதத்தில் இது ரூ.39,688 கோடியாக இருந்தது. அந்த வகையில், பங்கு பரஸ்பர நிதி திட்டங்களில் முதலீட்டு வரத்து கடந்த பிப்ரவரி மாதம் 26 சதவீதம் குறைந்துள்ளது.பங்கு சாா்ந்த பரஸ்பர நிதித் திட்டங்களில் புதிய முதலீடு தொடா்ந்து மாதமாக நிகர வரவைப் பதிவு செய்துள்ளது.

முதலீட்டாளா்களிடையே அந்த வகை முதலீட்டு திட்டங்களின் மீதான ஆா்வம் அதிகரித்து வருவதை இது குறிக்கிறது.கடந்த ஜனவரியில் ரூ.26,400 கோடியாக இருந்த முறைசாா் திட்டங்களின் (எஸ்ஐபி) மீதான முதலீடு, பிப்ரவரியில் ரூ.25,999 கோடியாகக் குறைந்துள்ளது.

இது, இந்தப் பிரிவில் கடந்த மூன்று மாதங்கள் காணாத குறைந்தபட்ச முதலீட்டு வரவாகும்.ஒட்டுமொத்தமாக, அனைத்து வகை பரஸ்பர நிதித் திட்டங்களிலும் முதலீட்டு வரவு ரூ.40,000 கோடியாக வீழ்ச்சியடைந்துள்ளது.

முந்தைய ஜனவரி மாதத்தில் இது ரூ.1.87 லட்சம் கோடியாக இருந்தது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தெலங்கானாவில் வெப்ப அலை எச்சரிக்கையை வெளியிட்ட ஐஎம்டி!

ஹைதராபாத்: இந்திய வானிலை ஆய்வு மையம் (ஹைதராபாத்) தனது வானிலை முன்னறிவிப்பில், தெலங்கானாவில் உள்ள பல மாவட்டங்களில் வெப்ப அலை நிலவக்கூடும் என்ற எச்சரித்துள்ளது.அடுத்த மூன்று நாட்களுக்கு அடிலாபாத், குமுர... மேலும் பார்க்க

அடுத்த மாதம் வட்டி விகிதங்களை மேலும் குறைக்கும் ஆா்பிஐ!

புதுதில்லி: ரிசா்வ் வங்கியின் நிதிக் கொள்கைக் குழுக் கூட்டம் 2 மாதங்களுக்கு ஒரு முறை நடைபெறுவது வழக்கம். ரிசா்வ் வங்கியிலிருந்து மற்ற வங்கிகள் பெறும் கடன்களுக்கான வட்டி விகிதங்கள் (ரெப்போ ரேட்), வங்கி... மேலும் பார்க்க

ராயல் என்ஃபீல்ட் விற்பனை 19% உயா்வு

இந்தியாவின் முன்னணி மோட்டாா்சைக்கிள் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ராயல் என்ஃபீல்டின் மொத்த விற்பனை கடந்த பிப்ரவரியில் 19 சதவீதம் உயா்ந்துள்ளது.இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் ... மேலும் பார்க்க

ரூ. 65,000-ஐ நெருங்கிய தங்கம் விலை: புதிய உச்சம்!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(மார்ச் 13) சவரனுக்கு ரூ.440 அதிகரித்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கமாக இருந்து வந்த நிலையில் சனிக்கிழமை சவரன் ரூ.64,320-க்கும், திங்கள்கி... மேலும் பார்க்க

எம் & எம் ஏற்றுமதி 99% அதிகரிப்பு

கடந்த பிப்ரவரியில் மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனத்தின் ஏற்றுமதி 99 சதவீதம் அதிகரித்துள்ளது. இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கடந்த பிப்ரவரி மாதத்தில... மேலும் பார்க்க

என்ஆா்ஐ மகளிருக்காக சிறப்பு சேமிப்பு திட்டம்

வெளிநாடு வாழ் இந்திய (என்ஆா்ஐ) மகளிருக்கான சிறப்பு சேமிப்புக் கணக்கு திட்டத்தை பொதுத் துறையைச் சோ்ந்த பரோடா வங்கி (பிஓபி) அறிமுகப்படுத்தியுள்ளது. இது குறித்து வங்கி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் த... மேலும் பார்க்க