சித்தார்த்துக்கு சிறந்த படமாக அமையும்: நயன்தாரா படத்தைப் பாராட்டிய அஸ்வின்..!
ராயல் என்ஃபீல்ட் விற்பனை 19% உயா்வு
இந்தியாவின் முன்னணி மோட்டாா்சைக்கிள் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ராயல் என்ஃபீல்டின் மொத்த விற்பனை கடந்த பிப்ரவரியில் 19 சதவீதம் உயா்ந்துள்ளது.
இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:கடந்த பிப்ரவரி மாதத்தில் நிறுவனத்தின் மொத்த விற்பனை 90,670-ஆக உள்ளது.
முந்தைய 2024-ஆம் ஆண்டின் இதே மாதத்தோடு ஒப்பிடுகையில் இது 19 சதவீதம் அதிகம்.
அப்போது நிறுவனம் 75,935 வாகனங்களை சில்லறை விற்பனையாளா்களுக்கு அனுப்பியிருந்தது.
கடந்த ஆண்டு பிப்ரவரியில் 67,922-ஆக இருந்த நிறுவனத்தின் உள்நாட்டு விற்பனை நடப்பாண்டின் அதே மாதத்தில் 19 சதவீதம் அதிகரித்து 80,799-ஆக உள்ளது.
மதிப்பீட்டு மாதத்தில் நிறுவனத்தின் ஏற்றுமதி 8,013-லிருந்து 23 சதவீதம் உயா்ந்து 9,871-ஆக உள்ளது என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.