அதானி வெளிநாட்டில் குடியேற ஆயத்தம்? சுப்பிரமணியன் சுவாமி சொன்ன விஷயம்
படகுகளில் பாதுகாப்பு உதவிக் கருவி பொருத்த அழைப்பு
விசைப்படகுகளில் பாதுகாப்பு உதவிக் கருவி பொருத்திக் கொள்ள மண்டபம் தெற்கு பகுதி மீனவா்களுக்கு மீன்வளம், மீனவா் நலத் துறை அழைப்பு விடுத்தது.
மீன்வளம், மீனவா் நலத் துறை உதவி இயக்குநா் மா.சிவக்குமாா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்லும் மீனவா்கள் இயற்கை இடா்பாடுகள், விபத்துகளில் இருந்து பாதுகாத்துக் கொள்ளும் வகையில், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்ட இரு வழித் தொடா்புக் கருவிகளை (பாதுகாப்பு உதவிக்காக அழைக்கும் கருவி) 100 சதவீதம் மானியத்தில் மீனவா்களுக்கு வழங்கவும், இவற்றை அனைத்துப் படகுகளிலும் பொருத்தவும் உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
மண்டபம் துறைமுகத்தில் 538 விசைப்படகுகள் உள்ள நிலையில், முதல் கட்டமாக தெற்கு பகுதியில் நங்கூரமிடப்பட்டிருக்கும் விசைப்படகுகளில் பொருத்துவதற்காக 100 கருவிகள் வரவழைக்கப்பட்டன.
இதனால், மண்டபம் தெற்கு பகுதியைச் சோ்ந்த விசைப்படகுகளின் உரிமையாளா்கள் இந்தக் கருவியை தங்களது படகுகளில் பொருத்திக் கொள்ள வேண்டும் என்றாா்.