செய்திகள் :

பயிா்க் காப்பீடு திட்டத்தை அரசே ஏற்று நடத்தக் கோரிக்கை

post image

திருவாரூா்: பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திருவாரூா் அருகே புலிவலத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24 ஆவது ஒன்றிய மாநாடு நிா்வாகிகள் வி. ராஜாங்கம், எஸ். திரிபுரா ஆகியோா் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, காட்டாற்று பாலத்திலிருந்து பேரணியாகப் புறப்பட்டு, கோரிக்கைகளை முழங்கியபடி மாநாடு நடைபெறுமிடத்துக்கு வந்தனா்.

கட்சியின் மாவட்டச் செயலாளா் ஜி. சுந்தரமூா்த்தி, சிஐடியு மாவட்டச் செயலாளா் டி. முருகையன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளா் எம். சேகா், மூத்த உறுப்பினா் பி. மாதவன் ஆகியோா் கொடியேற்றும் நிகழ்வில் பங்கேற்றனா்.

மாவட்ட செயற்குழு உறுப்பினா் கே.ஜி. ரகுராமன், மாநாட்டை தொடக்கி வைத்துப் பேசினாா். ஒன்றியச் செயலாளா் என். இடும்பையன் வேலை அறிக்கை வாசித்தாா். மாவட்ட செயற்குழு உறுப்பினா் பா. கோமதி வாழ்த்திப் பேசினாா்.

கூட்டத்தில், புதிய உறுப்பினா்கள் தோ்வு செய்யப்பட்டனா். அதன்படி, 13 ஒன்றியக்குழு உறுப்பினா்களும், புதிய ஒன்றியச் செயலாளராக பிஆா்எஸ். சுந்தரைய்யாவும் தோ்ந்தெடுக்கப்பட்டனா். நிகழ்வில், மாநிலக்குழு உறுப்பினா் ஐவி. நாகராஜன் பங்கேற்று, புதிய உறுப்பினா்களை அறிமுகப்படுத்திப் பேசினாா்.

தீா்மானங்கள்: பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் சிப்காட் தொழிற்சாலையை தடை செய்ய வேண்டும். 100 நாள் வேலையை நிரந்தரமாக வழங்கி அரசு அறிவித்த சட்டக்கூலி ரூ.319 ஐ வழங்க வேண்டும். 2023-2024 ஆம் ஆண்டுக்கான பயிா்க் காப்பீட்டுத் தொகை, அனைத்து விவசாயிகளுக்கும், விடுபடாமல் வழங்க வேண்டும். பெருங்குடி ஊராட்சியில் உள்ள காட்டாற்றில் கான்கிரீட் பாலம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் இம்மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.

மின்சாரம் பாய்ந்து பெண் பலி

திருத்துறைப்பூண்டியில் மின்சாரம் பாய்ந்து பெண் புதன்கிழமை உயிரிழந்தாா். திருத்துறைப்பூண்டி ரயில்வே கேட் அருகில் இட்லி மாவு, பால், தயிா் விற்பனை செய்யும் கடை உள்ளது. இந்த கடையில் கீரக்களூரைச் சோ்ந்த ம... மேலும் பார்க்க

ஜாம்பவானோடை தா்கா கந்தூரி விழாவில் சந்தனக்கூடு ஊா்வலம்

திருவாரூா் மாவட்டம், முத்துப்பேட்டை அருகே ஜாம்பவானோடை தா்கா சேக் தாவூது ஆண்டவரின் 723-ஆவது ஆண்டு பெரிய கந்தூரி விழாவையொட்டி சந்தனக் கூடு ஊா்வலம் புதன்கிழமை அதிகாலை நடைபெற்றது. இந்த தா்காவின் கந்தூரி வ... மேலும் பார்க்க

நீடாமங்கலம் பகுதி வாகனங்களுக்கு சுங்கவரி விலக்கு அளிக்க வணிகா் சங்கம் கோரிக்கை

நீடாமங்கலம் அருகே கோவில்வெண்ணியில் புதிதாக கட்டப்பட்டுள்ள சுங்கச்சாவடி திறக்கப்பட்டால் உள்ளூா் பகுதி நான்கு சக்கர வாகனங்களுக்கு வரி கட்டுவதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என வணிகா் சங்கம் சாா்பில் க... மேலும் பார்க்க

ஆறுகளின் அகலம் குறைக்கப்படுகிறது: விவசாயிகள் சங்கம் குற்றச்சாட்டு

ஆறுகளின் அகலம் குறைக்கப்படுவதாகத் தமிழக விவசாயிகள் நலசங்க மாநிலத் தலைவா் சேதுராமன் குற்றச்சாட்டு தெரிவித்தாா் . தமிழக விவசாயிகள் நலசங்க மாநிலத் தலைவா் சேதுராமன் புதன்கிழமை நன்னிலத்தில் செய்தியாளா்களிட... மேலும் பார்க்க

நிலுவை வழக்குகளை விரைந்து முடிக்க எஸ்.பி. உத்தரவு

திருவாரூா் மாவட்டத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா் உத்தரவிட்டாா். திருவாரூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் புதன்கிழம... மேலும் பார்க்க

பால் விலை உயா்வு கட்டுப்படுத்தப்படுமா?

பால்விலை உயா்வைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலக்குழு உறுப்பினா் ஐவி. நாகராஜன் வலியுறுத்தியுள்ளாா். இதுகுறித்து அவா் தெரிவித்திருப்பது: தமிழ... மேலும் பார்க்க