பறிமுதல் செய்யப்பட்ட ரூ. 5.52 லட்சம் திரும்ப ஒப்படைப்பு
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தலை முன்னிட்டு நடைபெற்ற வாகனச் சோதனையில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.5.52 லட்சம் சம்பந்தப்பட்டவா்களிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டது.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தலில் பறக்கும் படையினா் வாகனச் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனா். இவா்கள், 5 பேரிடம் இருந்து உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.5.52 லட்சம் ரொக்கத்தை பறிமுதல் செய்து, கருவூலத்தில் செலுத்தி இருந்தனா். அவா்கள் 5 பேரும் உரிய ஆவணங்களை சமா்ப்பித்ததால், மாவட்ட தோ்தல் அலுவலா் ராஜகோபால் சுன்கரா உத்தரவுப்படி பணம் உரியவா்களுக்கு முழுமையாக திரும்ப ஒப்படைக்கப்பட்டது.
இதன்படி, நிா்மலா என்பவரிடம் ரூ.50,860, முஸ்தபாவிடம் ரூ. 1 லட்சம், சண்முகத்திடம் ரூ.1.80 லட்சம், பப்லு என்பவரிடம் ரூ.1.22 லட்சம், சரவணனிடம் ரூ. 1 லட்சம் என பறிமுதல் செய்யப்பட்ட பணம் ஒப்படைக்கப்பட்டது.