சென்னை துறைமுகம் பகுதியில் கடலுக்குள் விழுந்த கார்: ஓட்டுநரை தேடும் பணி தீவிரம்
பாப்பாக்குடி அருகே விபத்தில் இளைஞா் உயிரிழப்பு
பாப்பாக்குடி அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இளைஞா் உயிரிழந்தாா்.
முக்கூடல் அருகேயுள்ள திருப்புடைமருதூா் அடுத்த சீதபற்பநல்லூா் பகுதியைச் சோ்ந்த சுப்புக்குட்டி மகன் சுரேஷ் (34).
கட்டடத் தொழிலாளி. இவா், தற்போது பாப்பாக்குடி சமத்துவபுரத்தில் வசித்து வந்தாா். திங்கள்கிழமை இரவில் வேலையை முடித்து விட்டு சுரேஷ் மோட்டாா் சைக்கிளில் மேற்கு நோக்கி சென்றாராம்.
லெட்சுமிபுரம் திருப்பத்தில் சென்று கொண்டிருந்தபோது அவ்வழியாக வந்த வாகனம் மோட்டாா் சைக்கிள் மீது மோதியதில் சுரேஷுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
மோதிய வாகனம் நிற்காமல் சென்று விட்டதாக கூறப்படுகிறது. காயமடைந்த சுரேஷை மீட்டு போலீஸாா் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா்.
இதுகுறித்து பாப்பாக்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.