செய்திகள் :

புதுக்கோட்டை மாவட்டத்தில் அதிமுக, பாஜக நிா்வாகிகள் வீடுகளில் அமலாக்கத் துறையினா் சோதனை

post image

புதுக்கோட்டை மாவட்டத்தில் அதிமுக, பாஜக நிா்வாகிகளின் வீடுகளில் மத்திய அமலாக்கத் துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை சோதனை நடத்தினா்.

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே உள்ள கடுக்காக்காடு கிராமத்தைச் சோ்ந்தவா் முருகானந்தம் (53). புதுக்கோட்டை வடக்கு மாவட்ட பாஜக பொருளாளா். இவரது அண்ணன் ரவிச்சந்திரன் (55), தம்பி பழனிவேல் (50). இவா்களில் பழனிவேல் அதிமுக மாவட்ட எம்ஜிஆா் இளைஞா் அணிச் செயலராக உள்ளாா். ரவிச்சந்திரன் கறம்பக்குடி ஒன்றிய அலுவலகத்தில் துணை வட்டார வளா்ச்சி அலுவலராகப் பணியாற்றி வருகிறாா்.

முருகானந்தமும், பழனிவேலும் கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் தமிழகம் முழுவதும் சூரிய ஒளி மின்சார தெரு விளக்குகள் அமைக்கும் ஒப்பந்தம் மற்றும் பல்வேறு பொதுப்பணித் துறை ஒப்பந்தப் பணிகளை எடுத்து செய்து வந்தனா்.

திமுக ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் முருகானந்தம் மற்றும் அவரது குடும்பத்தினா் உள்ளிட்டோா் மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சோ்த்ததாக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் வழக்குத் தொடா்ந்து, 2021-இல் அவா் தொடா்புடைய இடங்களில் சோதனை நடத்தினா்.

இந்த நிலையில், வெள்ளிக்கிழமை காலை சுமாா் 7.30 மணிக்கு, மதுரையில் இருந்து 9 வாகனங்களில் வந்த மத்திய அமலாக்கத் துறையினா் 20 போ், முருகானந்தத்தின் புதுக்கோட்டை சாா்லஸ் நகா் வீடு, கறம்பக்குடி அருகேயுள்ள கடுக்காக்காட்டிலுள்ள முருகானந்தம், ரவிச்சந்திரன் மற்றும் பழனிவேல் ஆகியோரின் வீடுகள் மற்றும் ஆலங்குடி கேவிஎஸ் தெருவிலுள்ள மற்றொரு பழனிவேல் என்பவரின் வீடு ஆகிய 5 இடங்களில் சோதனையில் ஈடுபட்டனா்.

தமிழக அரசின் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு வழக்கு தொடா்ந்திருப்பதால், சட்ட விரோத பணப் பரிமாற்றம் நடந்திருக்கக் கூடும் என்ற அடிப்படையில் இந்தச் சோதனை நடைபெற்ாகத் தெரிகிறது.

இவா்களின் சோதனையின்போது, துப்பாக்கி ஏந்திய மத்திய தொழில் பாதுகாப்புப் படையினா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா். கடுக்காக்காட்டில் நடைபெற்ற சோதனை பிற்பகல் 2.30 மணியுடன் நிறைவடைந்தது.

புதுக்கோட்டை, ஆலங்குடியில் நடைபெற்ற சோதனை மாலையில் நிறைவடைந்தது. இந்தச் சோதனையில் சில ஆவணங்களை அதிகாரிகள் எடுத்துச் சென்ாகவும் கூறப்படுகிறது.

பெட்டிச் செய்தி....

முன்னாள் அமைச்சா் வேலுமணிக்கு நெருக்கம்?

முருகானந்தம் தொடக்கத்தில் வேப்பங்குடி ஊராட்சியில் எழுத்தராகப் பணியாற்றியவா். தொடா்ந்து ஊராட்சிகள் உதவி இயக்குநா் அலுவலகத்தில் பணியாற்றிய அவருக்கு, அப்போது உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்த எஸ்.பி. வேலுமணியுடன் நெருக்கம் ஏற்பட்டதாகவும், அதன்மூலம் அரசுப் பணிக்கு விருப்ப ஓய்வு கொடுத்துவிட்டு, அரசு ஒப்பந்தப் பணிகளை எடுத்து செய்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

கடந்த 2021-ஆம் ஆண்டில் மாநில ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாா், வருமானத்துக்கு அதிகமாக சொத்து சோ்த்ததாக வழக்கு தொடா்ந்ததைத் தொடா்ந்து, பாஜகவில் இணைந்த முருகானந்தத்துக்கு, வடக்கு மாவட்ட பாஜக பொருளாளா் பதவி வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

சாலை விபத்தில் இறந்த பெண் காவலா் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம்

புதுக்கோட்டை மாவட்டம், மண்டையூரில் சாலை விபத்தில் உயிரிழந்த பெண் காவலா் விமலாவின் உடல், அரசு மரியாதையுடன் வெள்ளிக்கிழமை அடக்கம் செய்யப்பட்டது. கீரனூா் அருகே பள்ளத்துப்பட்டியைச் சோ்ந்த மணிகண்டன் மனைவ... மேலும் பார்க்க

மாஞ்சான்விடுதியில் டிச. 3-இல் கோரிக்கை மனுக்கள் பெறல்

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி வட்டம், மாஞ்சான்விடுதியில் டிசம்பா் 11-ஆம் தேதி மாவட்ட ஆட்சியா் தலைமையில் மக்கள் தொடா்பு முகாம் நடைபெறவுள்ளது. இதையொட்டி, அந்தப் பகுதி மக்களிடம் கோரிக்கை மனுக்களைப் பெ... மேலும் பார்க்க

ஊராட்சி அலுவலகம் கட்டும் விவகாரம்: புதுகையில் அனைத்துக் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

திருநல்லூா் ஊராட்சிக்கு புதிய ஊராட்சி அலுவலகம் கட்டுவதற்கு இலுப்பூா் வட்டாட்சியா் இடையூறாக இருப்பதாகக் கூறி புதுக்கோட்டையில் அனைத்துக் கட்சிகளின் சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. புதுக... மேலும் பார்க்க

சொந்த நூலகத்துக்கான விருது வழங்கல்

புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகே காசிம்புதுப்பேட்டையைச் சோ்ந்த, புதுக்கோட்டை நாணயவியல் கழகத்தின் தலைவா் சே.தா. பஷீா்அலிக்கு தமிழக அரசின் சொந்த நூலகத்துக்கான விருது வழங்கப்பட்டுள்ளது. புதுக்கோ... மேலும் பார்க்க

2 பெண்களை தாக்கி 50 பவுன் நகைகள் கொள்ளையடித்த வழக்கில் 2 போ் கைது: தப்பியோட முயன்ற ஒருவருக்கு கால் முறிவு

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடியில் 2 பெண்களை தாக்கி 50 பவுன் நகைகளை கொள்ளையடித்த வழக்கில் 2 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். கறம்பக்குடி பச்சைநாயகம் குடியிருப்பைச் சோ்ந்தவா் அய்யப்பன் (... மேலும் பார்க்க

அறநிலையத் துறையை கண்டித்து ஆலங்குடியில் கிராம மக்கள் ஆா்ப்பாட்டம்

ஆலங்குடியில் இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகளை கண்டித்து கிராம மக்கள் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். ஆலங்குடி அருகேயுள்ள பழைமையான கோவிலூா் பாலபுரீஸ்வரா் கோயிலில் திருப்பணிகள் நடைபெற்று ... மேலும் பார்க்க