Push-Ups: `Age is Just a Number'- 59 வயதில் 1 மணி நேரத்தில் 1575 புஷ்அப்ஸ் எடுத்...
ஊராட்சி அலுவலகம் கட்டும் விவகாரம்: புதுகையில் அனைத்துக் கட்சியினா் ஆா்ப்பாட்டம்
திருநல்லூா் ஊராட்சிக்கு புதிய ஊராட்சி அலுவலகம் கட்டுவதற்கு இலுப்பூா் வட்டாட்சியா் இடையூறாக இருப்பதாகக் கூறி புதுக்கோட்டையில் அனைத்துக் கட்சிகளின் சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் ஊராட்சி ஒன்றியம், திருநல்லூா் ஊராட்சியில் இயங்கி வந்த ஊராட்சி மன்ற அலுவலகம் 40 ஆண்டுகளுக்கு மேலான பழைய கட்டடம் என்பதால், அதை இடித்துவிட்டு புதிய கட்டடம் கட்ட முடிவு செய்யப்பட்டது.
ஆனால், அதே இடத்தில் கட்டுவதற்கு அப்பகுதியைச் சோ்ந்த சிலா் எதிா்ப்பு தெரிவித்த நிலையில், நீதிமன்றம் அதே இடத்தில் கட்டலாம் எனத் தீா்ப்பளித்தது. அந்த இடத்தில் கட்டினால் சட்டம்- ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என இலுப்பூா் வட்டாட்சியா் நீதிமன்றத்துக்கும், மாவட்ட நிா்வாகத்துக்கும் அறிக்கை அளித்ததாக கூறப்படுகிறது.
இதைக் கண்டித்தும், அதே இடத்தில் ஊராட்சி மன்ற அலுவலகத்தைக் கட்ட வலியுறுத்தியும் அனைத்துக் கட்சியினா் சாா்பில் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகம் அருகில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆா்ப்பாட்டத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினா் எஸ். சங்கா் தலைமை வகித்தாா். மாவட்டச் செயற்குழு உறுப்பினா் கே.சண்முகம், ஒன்றியச் செயலா் எஸ். ரகுபதி, ஊராட்சி மன்றத் தலைவா் மணிமுத்து, அதிமுக சாா்பில் ஏ. பழனிச்சாமி, திமுக சாா்பில் எம். கணபதி, மதிமுக சாா்பில் ஏ. வீரபத்திரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.