செய்திகள் :

தூத்துக்குடி மீனவர்கள் 6 பேர் மாயம்

post image

தூத்துக்குடி: தூத்துக்குடி திரேஸ்புரத்தில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற 6 மீனவர்கள் மாயமானதையடுத்து, அவர்களைத் தேடும் பணியில் இந்திய கடலோர பாதுகாப்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர்.

தூத்துக்குடி திரேஸ்புரம் நாட்டுப் படகு மீன்பிடி துறைமுகத்திலிருந்து சதீஷ்குமார் என்பவரது படகில் விக்னேஷ், அல்போன்ஸ், ஜூடு, சுதர்சன், ஜார்ஜ் ஆகிய 6 மீனவர்கள் கடந்த 21 ஆம் தேதி ஆழ்கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். இவர்கள் ராமேசுவரம் பாம்பன் கடல் பகுதியில் இருந்து 30 கடல் மைல் தொலைவில் கடலில் மீன்பிடித்து கொண்டு இருந்துள்ளனர்.

இதையும் படிக்க |ஃபென்ஜால் புயல் புதுச்சேரி அருகே இன்று கரையைக் கடக்கும்; வடகடலோர மாவட்டங்களுக்கு கனமழை!

இந்தநிலையில், கடந்த 26 ஆம் தேதி கரை திரும்ப வேண்டியவர்கள் இதுவரை கரை திரும்பவில்லை. மேலும் இவர்கள் எந்த பகுதியில் இருக்கிறார்கள் என தொடர்பு கொள்ளவும் முடியவில்லை.

எனவே, இது குறித்து தூத்துக்குடி திரேஸ்புரம் நாட்டுப் படகு மீன்பிடி சங்கம் சார்பில் தூத்துக்குடி மீன்வளத்துறை, மாவட்ட நிர்வாகம், கடலோர பாதுகாப்பு குழும காவல்துறை, இந்திய கடலோர பாதுகாப்புப் படை ஆகியோருக்கு புகார் அளித்தனர்.

இதைத் தொடர்ந்து இந்திய கடலோர பாதுகாப்பு படையினர் காணாமல் போன மீனவர்களை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

கனமழை: சென்னை புறநகர் ரயில் சேவை குறைப்பு

சென்னை புறநகர் ரயில் சேவை குறிப்பிட்ட இடைவெளியில் இயக்கப்படும் என்றும், வழக்கமான ரயில் சேவை குறைக்கப்பட்டிருப்பதாகவும் ரயில்வே அறிவித்துள்ளது.தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள ஃபெங்ஜால் புயல் காரண... மேலும் பார்க்க

கனமழை எதிரொலி: கார் பார்க்கிங்காக மாறிய வேளச்சேரி மேம்பாலம்!

ஃபென்ஜால்’ புயல் புதுச்சேரிக்கு கிழக்கே 150 கி.மீட்டர் தொலைவிலும், சென்னைக்கு தென்கிழக்கே 140 கி.மீட்டர் தொலைவில் நிலைக் கொண்டுள்ள நிலையில், புயல் எச்சரிக்கை காரணமாக, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ப... மேலும் பார்க்க

புயல் இன்று இரவு அல்லது நாளை காலைதான் கரையைக் கடக்கும்: பிரதீப் ஜான்

வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ‘ஃபென்ஜால்’ புயலாக வெள்ளிக்கிழமை உருவானது. இந்தப் புயல் சனிக்கிழமை (நவ. 30) இரவு அல்லது ஞாயிற்றுக்கிழமை காலை(டிச.1) புதுச்சேரி அருகே கரையைக் கடக்க... மேலும் பார்க்க

ஃபென்ஜால் புயல் புதுச்சேரி அருகே இன்று மாலை கரையை கடக்கும்

வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ‘ஃபென்ஜால்’ புயலாக வெள்ளிக்கிழமை உருவானது. இந்தப் புயல் சனிக்கிழமை (நவ. 30) மாலை புதுச்சேரி அருகே கரையைக் கடக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம்... மேலும் பார்க்க

கனமழை, புயல் எச்சரிக்கை: திருவண்ணாமலை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை!

புயல் எச்சரிக்கை மற்றும் கனமழையைத் தொடர்ந்து திருவண்ணாமலை மாவட்டம் மற்றும் தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர், கும்பகோணம் தாலுகாக்களில் உள்ள பள்ளிகளுக்கு(நவ.30) மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.... மேலும் பார்க்க

நடிகை சமந்தாவின் தந்தை காலமானார்!

நடிகை சமந்தாவின் தந்தை ஜோசப் பிரபு உடல்நலக் குறைவுவால் காலமானார்.சமந்தா தனது தந்தை காலமானதை இன்ஸ்டாகிராமில் ஸ்டோரி வெளியிட்டு உறுதிபடுத்தியுள்ளார். மேலும் பார்க்க