செய்திகள் :

கனமழை, புயல் எச்சரிக்கை: திருவண்ணாமலை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை!

post image

புயல் எச்சரிக்கை மற்றும் கனமழையைத் தொடர்ந்து திருவண்ணாமலை மாவட்டம் மற்றும் தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர், கும்பகோணம் தாலுகாக்களில் உள்ள பள்ளிகளுக்கு(நவ.30) மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஃபென்ஜால் புயல் சனிக்கிவமை பிற்பகல் கரையைக் கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

வடமேற்கு திசையில் நகர்ந்து சனிக்கிழமை காரைக்கால்-மாமல்லபுரம் இடையே ஃபென்ஜால் புயல் கரையைக் கடக்கும்.

புயல் கரையைக் கடக்கும் போது ஒருசில இடங்களில் 90 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும். வட தமிழக கடலோர மாவட்டங்களில் மணிக்கு 70 கி.மீ. வேகத்தில் காற்று வீசும். சென்னை, புறநகர் பகுதிகளிலும் நாளை ஓரிரு இடங்களில் அதிகனமழைக்கு வாய்ப்பு உள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் புயல் எச்சரிக்கையைத் தொடர்ந்து சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், விழும்புரம் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் காலை 10 மணி வரை கனமழைக்கு வாய்ப்புள்ளதால் பள்ளி, கல்லூரிகளுக்கு நவ.30 விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க|ஃபென்ஜால் புயல் புதுச்சேரி அருகே இன்று கரையைக் கடக்கும்; வடகடலோர மாவட்டங்களுக்கு கனமழை!

கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, தஞ்சாவூர், சேலம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் 3 மணி நேரம் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் அதிகபட்டமாக கத்திவாக்கத்தில் 7 மி.மீ. மழைப்பதிவாகியுள்ளது. திருவெறஅரஊய்ர் 5 மி.மீ, தம்டையார்பேட்டை 4.6 மி.மீ, மணலி 4.2 மி.மீ பதிவாகியுள்ளது. சென்னையில் சராசரியாக 3.45 மி.மீ. மழைப்பதிவாகியுள்ளது.

திருவண்ணாமலை, தஞ்சாவூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை

கனமழை காரணமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு (நவ.30) மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் உத்தரவிட்டுள்ளார்.

இதேபோன்று தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர், கும்பகோணம் தாலுகாக்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கனமழை: சென்னை புறநகர் ரயில் சேவை குறைப்பு

சென்னை புறநகர் ரயில் சேவை குறிப்பிட்ட இடைவெளியில் இயக்கப்படும் என்றும், வழக்கமான ரயில் சேவை குறைக்கப்பட்டிருப்பதாகவும் ரயில்வே அறிவித்துள்ளது.தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள ஃபெங்ஜால் புயல் காரண... மேலும் பார்க்க

கனமழை எதிரொலி: கார் பார்க்கிங்காக மாறிய வேளச்சேரி மேம்பாலம்!

ஃபென்ஜால்’ புயல் புதுச்சேரிக்கு கிழக்கே 150 கி.மீட்டர் தொலைவிலும், சென்னைக்கு தென்கிழக்கே 140 கி.மீட்டர் தொலைவில் நிலைக் கொண்டுள்ள நிலையில், புயல் எச்சரிக்கை காரணமாக, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ப... மேலும் பார்க்க

புயல் இன்று இரவு அல்லது நாளை காலைதான் கரையைக் கடக்கும்: பிரதீப் ஜான்

வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ‘ஃபென்ஜால்’ புயலாக வெள்ளிக்கிழமை உருவானது. இந்தப் புயல் சனிக்கிழமை (நவ. 30) இரவு அல்லது ஞாயிற்றுக்கிழமை காலை(டிச.1) புதுச்சேரி அருகே கரையைக் கடக்க... மேலும் பார்க்க

ஃபென்ஜால் புயல் புதுச்சேரி அருகே இன்று மாலை கரையை கடக்கும்

வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ‘ஃபென்ஜால்’ புயலாக வெள்ளிக்கிழமை உருவானது. இந்தப் புயல் சனிக்கிழமை (நவ. 30) மாலை புதுச்சேரி அருகே கரையைக் கடக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம்... மேலும் பார்க்க

தூத்துக்குடி மீனவர்கள் 6 பேர் மாயம்

தூத்துக்குடி: தூத்துக்குடி திரேஸ்புரத்தில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற 6 மீனவர்கள் மாயமானதையடுத்து, அவர்களைத் தேடும் பணியில் இந்திய கடலோர பாதுகாப்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர்.தூத்துக்குடி திர... மேலும் பார்க்க

நடிகை சமந்தாவின் தந்தை காலமானார்!

நடிகை சமந்தாவின் தந்தை ஜோசப் பிரபு உடல்நலக் குறைவுவால் காலமானார்.சமந்தா தனது தந்தை காலமானதை இன்ஸ்டாகிராமில் ஸ்டோரி வெளியிட்டு உறுதிபடுத்தியுள்ளார். மேலும் பார்க்க